சோசப்பு பிரீசிட்லி (Joseph Priestley, 24 மார்ச் [யூ.நா. 13 மார்ச்] 1733 – 6 பெப்ரவரி 1804) ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் (ஒட்சிசன், உயிர்வளி) கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][2][3]