சுகுத்திரா டிராகன் மரம் (தாவர வகைப்பாட்டியல்: Dracaena cinnabari, Socotra dragon tree) அல்லது டிராகன் குருதி மரம் (dragon blood tree) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவுகளைத் தாயகமாகக் கொண்ட டிராகன் மரம் ஆகும். இம்மரம் "டிராகன் குருதி" எனப்படும் செந்நிற பிசின்களை சுரப்பதனால் இதற்கு இப்பெயர் அமைந்தது.[2]
விபரம்
டிராகன் குருதி மரம் மிகவும் புகழ் பெற்றதும் அழகானதும், சுகுத்திராத் தீவில் தனிச்சிறப்பு வாய்ந்த தாவரமும் ஆகும். இது தனித்துவமான, விநோத (மேலே குவிந்த, அடர்த்தியாக நிரம்பிய கிரீட, குடை போன்ற) தோற்றத்தைக் கொண்டது.
உசாத்துணை
வெளி இணைப்புகள்