Share to: share facebook share twitter share wa share telegram print page

சீசெல்சின் சுதந்திர நினைவுச் சின்னம்

சுதந்திர நினைவுச் சின்னம்
Liberty Monument
இடம்5 ஆவது சூன் அவென்யூ, விக்டோரியா, சீசெல்சு
வடிவமைப்பாளர்தோம் போவர்சு
வகைசிற்பம்
கட்டுமானப் பொருள்வெண்கலம்
துவங்கிய நாள்2014
முடிவுற்ற நாள்2014
அர்ப்பணிப்புசீசெல்சின் சுதந்திரம்

சுதந்திர நினைவுச் சின்னம் (Liberty Monument) சீசெல்சு நாட்டின் தலைநகரம் விக்டோரியாவில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களிடமிருந்து சீசெல்சு சுதந்திரம் பெற்றதை கொண்டாடும் வகையில் இச்சின்னம் அமைக்கப்பட்டது.

வரலாறு

1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திர மனிதன் சிலைக்கு மாற்றாக சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 201 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று இயேம்சு மைக்கேல் என்பவரால் இச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது.[1]

வடிவமைப்பு

சுதந்திர நினைவுச்சின்னம் தோம் போவர்சால் வடிவமைக்கப்பட்டு செதுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள வெண்கல காலத்து வார்ப்புக் கூடத்தில் இவ்வெண்கலம் வடிவமைக்கப்பட்டது.[2][3] ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் தலைக்கு மேல் தேசியக் கொடியை வைத்திருப்பதை இச்சின்னம் சித்தரிக்கிறது.[4]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya