மாணிக்கவாசகர் கோயில் என்பது திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகருக்கு தேனி மாவட்டத்தின் சின்னமனுாரில் எழுப்பப்பட்டுள்ள ஒரு கோயில் ஆகும். [1]
இக்கோயிலானது சிவகாமியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ளதால் இக்கோவிலுக்கும் பக்தா்கள் அதிக அளவில் சென்று வருகின்றனா். இங்கே தமிழில் வழிபாடு செய்யப்படுகிறது. [2]
இக்கோயிலின் மூலவரான மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி உள்ளார். இவர் நின்ற கோலத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் சின்முத்திரைக் காட்டியபடி உள்ளார்.
காசிவிசுவநாதர் - விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
இக்கோயிலில் சண்டிகேசுவரர், நவகிரக மண்டபம், கோரசனீசுவரர், சித்ரகுப்தர் சன்னதிகள் உள்ளன.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.