சால்ட் (2010 திரைப்படம்)

சால்ட்
இயக்கம்பிலிப் நோய்ஸ்
தயாரிப்புலோரென்சோ டி பொனவெண்ட்ரா
சுனில் பெர்காஷ்
கதைகர்ட் விம்மர்
இசைஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட்
நடிப்புஏஞ்சலினா ஜோலி
லிவிவ் ஸ்கிரீபர்
சிவிவெல் இஜியோபோ
டேனியல் ஆல்ப்ரிச்ஸ்கி
ஆகஸ்ட் டைல்
யாரா ஷாஹிதி
ஒளிப்பதிவுராபர்ட் எல்விட்
படத்தொகுப்புஸ்டூவர்ட் பைர்ட்
ஜான் கில்ரோய்
கலையகம்டி. பொன்னவென்ட்ரா பிக்சர்ஸ்
விண்டிகிரீன் புரொடக்சன்ஸ்
ரெய்ன்மேக்கர் டிஜிட்டல் எஃபெக்ட்ஸ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 19, 2010 (2010-07-19)(Hollywood premiere)
சூலை 23, 2010
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுயுனைட்ட் பிக்சர்ஸ்
மொழிஆங்கிலம்
உருசியம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்[1]
மொத்த வருவாய்$293.5 மில்லியன்[1]

சால்ட் (Salt) என்பது 2010 ஆம் ஆண்டைய அமெரிக்க அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். படத்தை பிலிப் நோய்ஸ் இயக்க, கர்ட் விம்மர் எழுதியுள்ளார். படத்தில் ஏஞ்சலினா ஜோலி, லீவ் ஸ்கிராபெர், டேனியல் ஆல்ப்ரிச்ஸ்கி, ஆகஸ்ட் டீல், சிவெடெல் எஜியோபோ ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உருசிய உளவாளி என குற்றம் சாட்டப்பட்ட ஈவ்லின் சால்ட் தன்மீது விழுந்த பழியை அழிக்க முயல்வதே இக்கதை.

முதலில் இக்கதையை டாம் குரூஸ் ஓரு ஆண் நாயகன் கதாபாத்திரத்தை கதைத் தலைவனாக கொண்டு எழுதினார். பின்னர் இந்தத் திரைக்கதையை பிரையன் ஹெல்ஜெலேண்டால் ஜோலிக்காக பெண் பாத்திரத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மாற்றி எழுதப்பட்டது. படத்தின் படப்பிடிப்பானது வாசிங்டன், டி. சி., நியூயார்க் நகரம் , ஆல்பெனி, நியோர்க் ஆகிய பகுதிகளில் 2009 மார்ச் முதல் சூன்வரையிலான காலகட்டத்தில் நடந்தது, பின்னர் மறு படப்பிடிப்பானது 2010 சனவரியில் நடந்தது.

இந்த படமானது வட அமெரிக்கவில் 2010 ஜூலை 23 அன்று வெளியானது மேலும் ஐக்கிய இராச்சில் 2010 ஆகத்து 18 அன்று வெளியிடப்பட்டது. சால்ட் படம் பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 294 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இப்படம் சண்டைக் காட்சிகள் மற்றும் ஜோலியின் நடிப்பு ஆகியவற்றுக்காக பாராட்டுதலைப் பெற்றது. படத்தின் குறுவட்டு மற்றும் ப்ளூ-ரே வட்டு 2010 திசம்பர் 21 இல் வெளியானது.

கதை

எல்லின் சால்ட் (ஏஞ்சலினா ஜோலி) என்னும் பெண் சி ஐ ஏ உளவாளியை வடகொரிய சிறையில் துன்புறுத்தப்படுவதில் இருந்து படம் துவங்குகிறது. அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு அமெரிக்கா திரும்புகிறார். அமெரிக்காவில் தஞ்சமடையும் ஒரு உருவசிய உளவாளி விசாரணையின்போது சால்ட் உருசியாவுக்காக உளவு பார்ப்பவர் என்கிறார். இதனால் சால்ட் அதிர்ச்சியடைகிறார். அமெரிக்க உளவு நிறவனம் அவரை சந்தேக‍க் கண்கொண்டு பார்கின்றது. தன் நேர்மையை நிறுபிக்க சால்ட் அவர்களிடம் இருந்து தப்பி ஒடுகிறார். தேடுதல் வேட்டை நடத்தும் எதிரிகளிடம் இருந்தும், அமேரிக்க அரசிடம் இருந்தும் தப்பி ஓடும் சால்ட், இறுதியில் மிகப்பெரிய அணு அழிவை நடக்கவிடாமல் தடுத்து தன் நேர்மையை நிறுபிக்கிறார்.

தயாரிப்பு

வளர்ச்சி மற்றும் எழுத்து

திரைக்கதையின் துவக்கம் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும், கர்ட் விம்மர் ஈக்வலிபிரியம் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடந்த செவ்வியில் விவரித்தார். 2002 நவம்பரில் நேர்காணலில், அவர் தற்போது எந்த திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பதைப் பற்றி விவரித்தார், அதில் அவர் "நான் பல திரைக்கதைகளைக் கொண்டிருக்கிறேன் - அதில் முதன்மையானது சால்ட் - என்னும் உயர்-அதிரடி உளவு திரில்லர் வகை கதை ..." மற்றொரு செவ்வியில், விம்மர் இந்த திரைக்கதைத் திட்டத்தைப் பற்றி "தானும் தன் மனைவியும் அதிகம் விவாதித்ததாக" விவரித்தார். திரைக்கதையின் சுருக்கப் பெயராக எட்வின் ஏ. சால்ட் என்று வைக்கப்பட்டது. பின்னர், திரைக்கதையானது 2007 சனவரியில் கொலம்பியா பிக்சர்சுக்கு விற்கப்பட்டது. 2007 சூலையில், திரைக்கதையை வாசித்த டாம் குரூஸின் கவனத்தைக் கவர்ந்தது.

டெர்ரி ஜார்ஜ் இந்தத் திரைப்படத் தயாரிப்புத் திட்டத்தில் சேர்ந்த முதல் இயக்குநர் ஆவார், மேலும் அவர் திரைக்கதையில் சில திருத்தங்களைச் செய்தார், ஆனால் விரைவில் அவர் இந்த திரைப்படப் பணியை விட்டுவிட்டார். பீட்டர் பெர்க் அடுத்த இயக்குனராக வந்து இணைந்தார், ஆனால் அவரும் கூட, சில காரணங்களுக்காக கைவிடப்பட்டார். ஒரு ஆண்டு கழித்து பிலிப் நோய்ஸ் இயக்குவார் என உறுதி செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Salt (2010)". பாக்சு ஆபிசு மோசோ. Amazon.com. 23 July 2010. பார்க்கப்பட்ட நாள் December 1, 2010-->. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!