சான் மாநிலப் படைகள் (வடக்கு) (Shan State Army) மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள சான் மாநிலத்தின் வடக்கில் செயல்படும் சான் தேசியவாதம் பேசும் ஒரு ஆயுதக் குழுவாகும். இதன் தாய் அமைப்பு சான் மாநில முன்னேற்றக் கட்சி ஆகும்.[4]
வரலாறு
சான் மாநிலப் படைகள் 24 ஏப்ரல் 1964 அன்றும், இதன் தாய் அமைப்பான சான் மாநில முன்னேற்றக் கட்சி 1971ம் ஆண்டிலும் நிறுவப்பட்டது.
மியான்மர் உள்நாட்டு மோதல்களை நிறுத்தம் ஒப்பந்தத்தில் சான் மாநிலச் சிறப்பு மண்டலம் எண் 3 என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மியான்மர் இராணுவம் சான் மாநிலப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியது. [5]