விலங்குகள் மற்றும் மீன் காட்சிசாலைகள் சங்கம், அமெரிக்கன் அருங்காட்சியகங்களின் கூட்டமைப்பு, அமெரிக்க விலங்குகாட்சிசாலைகளின் சங்கம், உலக விலங்குக் காட்சிசாலைகள் மற்றும் மீன் காட்சிசாலைகள் கூட்டமைப்பு [3][4][5][6]
சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை (San Diego Zoo), ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் சான் டியேகோ நகரத்தின் பால்போ பூங்காவில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் காட்சி சாலையைப் பார்வையிட அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சான் டியேகோ விலங்குக்காட்சிசாலையில் 650 வகையான இனங்கள், மற்றும் துணையினங்களில் 3,700 விலங்குகள் உள்ளது. இவ்விலங்குக்காட்சிசாலையின் தாய் நிறுவனம், சான் டியேகோ உலகளாவிய விலங்கியல்காட்சிசாலை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அமெரிக்க மற்றும் பன்னாட்டு விலங்கியல் காட்சிசாலைகளின் அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
இக்காட்சிசாலையில் விலங்குகள் கூட்டில் அடைக்கப்படாமல் திறந்த வெளியில் காட்சிக்கு உள்ளன.[7]பாண்டா கரடி வளர்ப்பில் இக்காட்சிசாலை உலக அளவில் முன்னிலையில் உள்ளது.[8]
சான் டியேகோ விலங்கியல் காட்சிசாலை எனும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம், சான் டியேகோ நகரத்தின் வெளிப்புறத்திலுள்ள 1200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பால்போ பூங்கா எனுமிடத்திலுள்ள நூறு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி, இவ்விலங்கியல் காட்சிசாலையை நடத்துகிறது.
வரலாறு
"Wouldn't it be wonderful to have a zoo in San Diego? I believe I'll build one."
—Harry M. Wegeforth, after hearing a lion roar at the 1915 Panama-California Exposition[9][10]
1915க்குப் பின்னர் சான் டியேகோ விலங்குக் காட்சிசாலையிலிருந்து அரிய விலங்குகளை காட்சியிலிருந்து வெளியேற்றியது.[9] 2 அக்டோபர் 1906 அன்று டாக்டர். ஹாரி எம். வேஜ்போர்த் சான் டியேகோவில் விலங்கியல் சங்கத்தை நிறுவினார்.[10] இவ்விலங்கியல் சங்கத்தின் விலங்குக் காட்சிச்சாலை, நியூயார்க் விலங்கியல் சங்கத்தின் விதிகளின் படி 1941 வரை செயல்பட்டது.[9] 1921ல், சான் டியேகோ நகர மேயரின் அறிவுரையின் படி, பால்போ பூங்காவின் சில பகுதிகளைக் கொண்டு, நகர நிர்வாகமே, விலங்குக் காட்சிசாலையை நிர்வகித்தது.[11]
எல்லன் பிரவுனிங் என்பவர், விலங்குக் காட்சிசாலையைச் சுற்றிலும் வேலி அமைக்க நிதியுதவினார்.[12] 13 சூன் 1923ல் இவ்விலங்குக் காட்சிச்சாலைக்கு வெளிநாடுகளிலிருந்து விலங்குகளைத் திரட்ட பிராங்க் பக் என்ற விலங்கியலாளர் மூன்றாண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டார்.[13] உலகின் கூண்டுகளற்ற, திறந்தவெளி விலங்குக் காட்சிசாலைகளுக்கு முன்னோடியாக சான் டியேகோ விலங்குச்சாலை உள்ளது.[12] 1922ல் திறந்த வெளி விலங்குச்சாலையைச் சுற்றிலும் கம்பி வலைகள் அமைத்து சிங்கங்கள், பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.[14]
1960 வரை, பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக் கட்டணமின்றி விலங்குச்சாலையைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. 1975 முதல் அருகிய விலங்கினங்களின் இன வளர்ச்சிக்கு, இந்த விலங்குக்காட்சிசாலையில் இன வளர்ச்சி மையம் நிறுவப்பட்டது. பின்னர் இவ்வளர்ச்சி மையத்தை, 2005 இல் அருகிய விலங்கினங்களை பாதுக்காத்தல் மற்றும் ஆய்வுப் பிரிவாக மாற்றியமைக்கப்பட்டது. 2009 இல் முதல் இப்பிரிவு விலங்குகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனமாக செயல்படுகிறது.[15]
1985ம் ஆண்டின் கோடைக்காலத்தில், இவ்விலங்குக்காட்சிசாலையிலிருந்து, கென் அல்லன் எனப்பெயரிடப்பட்ட ஒராங்குட்டான் குரங்கு அடிக்கடி தப்பித்துச் சென்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின.[16] இந்த விலங்குக் காட்சிசாலையின் உலகின் ஒரே அல்பினோ கோலா கரடி 1 செப்டம்பர் 1997 அன்று ஒரு குட்டியை ஈன்றது.[17] ஆஸ்திரேலியாவிற்கு வெளியே, கோலா கரடிகள் அதிகமாக உள்ளது, இவ்விலங்குக் காட்சிசாலையில் மட்டுமே 1979க்கு அடுத்து, 2014 இல் ஆப்பிரிக்கன் பென்குயின்களின் பெரிய கூட்டம் சான் டியேகோ விலங்குக் காட்சிசாலையில் வரவழைக்கப்பட்டது.
சிறப்புகள்
இவ்விலங்கு காட்சிசாலையை சுற்றிப் பார்ப்பதற்கு வரும் 75% பார்வையாளர்கள் இரட்டை அடுக்கு கொண்ட பேருந்துகளில் ஏறி காண்கின்றனர். மேலும் வான் வழியாக விலங்குக் காட்சிசாலையை காண்பதற்கு கோண்டோலா லிப்ட் வசதி உள்ளது.
உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும் விலங்குகளை இந்த விலங்குக் காட்சிசாலையில், அதன் இயல்பான இயற்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படும் கொரில்லா முதல் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியின் தைகா மற்றும் தூந்திரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் துருவக் கரடிகள் வரை இவ்விலங்குக் காட்சியில் உள்ளது.
பறவைகள் நன்கு பறக்கும் அளவிற்கு, கம்பிகளால் மூடப்பட்ட மிகப்பெரிய கூண்டுகளில், நீர் குட்டைகளுடன் பராமரிக்கப்படுகிறது. இவிடத்தில் பறவைகளும், நீர் வாழ் விலங்குகளும் இயற்கையாக வளர்கிறது.
சான் டியேகோ பகுதியில் நிலவும் தட்பவெப்பம் செடி, கொடி மரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்புடையதாக உள்ளது. இங்குள்ள பூங்காவில் விலங்குகளின் உணவிற்காக 7,00,000 வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகிறது.[18]
பாண்டா கரடி போன்ற சிறப்பு விலங்கினங்களுக்கான உணவிற்காக 40 வகையான மூங்கில் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கோலா எனும் விலங்குகளின் உணவிற்காக தைல மரங்களை வளர்க்கின்றனர். இவ்விலங்குக் காட்சிசாலையின் பராமரிப்பிற்காக 481 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.[19]
காட்சிகள்
குரங்குகளின் தடங்கள்
ஆசிய-ஆப்பிரிக்க குரங்கள் மற்றும் பிற விலங்குகளை நடமாட்டத்திற்கு தனி வழித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
[20]
↑San Diego Historical Society History News, Vol. 23, No. 5. (May 1987), p. 3. Past Comes Alive, Fascinating facts from the Archives, Frank Buck in San Diego.
Amero, Richard W. (2013). Balboa Park and the 1915 Exposition (1st ed.). Charleston, South Carolina: The History Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-626193-45-2.
Ernst & Young LLP, 2005. "Zoological Society of San Diego Financial Statements 2004"
Greeley, M., et al. 1997. The San Diego Zoo. (California: Craftsman Press)
Wegeforth, H.M. & Morgan, N. 1953. It Began with a Roar: the Beginning of the World-Famous San Diego Zoo (revised edition). (California: Crest Offset Printing Company)