இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
சவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh, 23 திசம்பர் 1902 – 29 மே 1987) இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட நாடாளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.
பிறப்பு
சரண் சிங் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் கிராமத்தில் ஒரு ஜாட் குடும்பத்தில் 1902 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 23-ம் தேதியில் பிறந்தார்.இந்தியாவில் உள்ள இன்றைய ஹரியானாவில் இருந்த பல்லப்கர் என்ற சமஸ்தானத்தின் மன்னராக இருந்த ராஜா நகாரின் சிங் இருந்தார்.அப்போது சரண்சிங்கின் மூதாதையரான தாத்தா முக்கியமானவராக அந்த அரசில் இருந்தார். மகாராஜா நகாரின் சிங் 1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய்க் கலகத்தில் கலந்துகொண்டு தோல்வியை சந்தித்தபின் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்; பிரித்தானிய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க பொருட்டு மகாராஜாவைப் பின் தொடர்பவர்கள் மற்றும் சரண்சிங்கின் மூதாதையர் உட்பட சாந்தினி சவுக் , தில்லி எல்லாம் திரிந்து முடிவில் உத்தர பிரதேசத்தில் மாவட்டத்தில் புலன்சாகர் எனும் இடத்தில் வாழ்க்கையை நடத்திச் சென்றனர்.
விடுதலைப் போராட்டம்
அவர் ஒரு நல்ல மாணவர்; ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1925 மற்றும் 1926 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். 1928-ல் அவர் ஒரு சிவில் வழக்கறிஞராக காஸியாபாதில் செயல்படத் துவங்கினார். சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு அவர்,1950 ல், ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் collectivist நில பயன்பாடு கொள்கைகளுக்கு
எதிரான போரில் இந்திய விவசாயிகளின் பொருட்டு,நாடு முழுவதும் விவசாய சமூகங்கள் குறிப்பாக தனது சொந்த மாநிலத்திற்கும் மாற்றம் பெறுவதற்கான போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
பிரித்தானிய அரசை எதிர்த்து சரண் சிங் தொடர்ந்து மகாத்மா காந்தியின் தலைமையில் ஈடுபட்டு பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.1930 இல் அவர் உப்பு சட்டங்களை மீறியதன் மூலம் 6 மாதங்கள் சிறையில் அனுப்பப்பட்டார். அவர் தனிநபர் சத்யாகிரகம் செய்ததன் பொருட்டு நவம்பர் 1940 ல் ஒரு வருடம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் மாதம் அவர் DIR கீழ் பிரித்தானிய சட்டத்தின் மூலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசியல் செயல்பாடுகள்
1937 -ல் பிப்ரவரியில் அவர் 34 வயதில் உத்தர பிரதேச சட்டமன்றத்தில், ( ஐக்கிய மாகாணத்துடன் சேர்ந்த)பாக்பத் மாவட்டத்தின் சப்ரோலி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விவசாயிகளுக்கு எதிரான வியாபாரிகளின் செயல்களை தில்லி மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 31 – 3 – 1938 ல் அவரால் வியாபாரிகளின் தவறான செயல்களுக்கு எதிராக விவசாயிகள் நலன்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவசாய விளைபொருட்களை சந்தை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மசோதா இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கப்பட்டது.1940-ல் இவ்வாறு செய்த முதல் மாநிலம் என்ற பெருமை பஞ்சாப் அடைந்தது.
ஜவகர்லால் நேருவின் சோவியத் பாணி பொருளாதார சீர்திருத்தத்தை சரண் சிங் எதிர்த்தார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண் சிங் கருத்து தெரிவித்தார். விவசாயிகள் அனைவரின் உரிமையும் மிக முக்கியம் என்றார் அவர். நேருவின் பொருளாதார கொள்கையின் மீதான தனது திறந்த விமர்சனம் காரணமாக சரண் சிங்கின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சரண்சிங் 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,பாரதீய கிரந்தி தள் எனும் பெயரில் தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.ராம் மனோகர் லோஹியா மற்றும் ராஜ் நரேன் ஆதரவுடன் அவர் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக உத்தர பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவசரகால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண்சிங்கையும் அனைத்து அவரது அரசியல் எதிரிகளையும் சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண்சிங் தனது போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார்.
அரசியல் உச்சம்
பாரதிய லோக் தள் கட்சியின் தலைவரான சரண்சிங், ஒரு முக்கிய அரசியல் நெருக்கடிக் காலத்தில் ஜனதா என்ற பெயரில் கூட்டணியில் இணைந்து மாபெரும் வெற்றி பெற்றார். 1977 மக்களவை தேர்தலில்,பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாகப் பரிமளித்துப் போட்டியிட்டாலும், தனது முந்தைய கட்சியான பாரதீய லோக் தளத்தின் சின்னமான ஏர் உழவன் சின்னத்தையே, புதிய ஜனதாவின் சின்னமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சாதித்தார்.அதன் மூலம் 1977 ல் பிரதம மந்திரி ஆக விரும்பிய தனது லட்சியம் நிறைவேறும் என்று எதிர்பார்த்தவர் ஏமாற்றம் அடைந்ததார்; காரணம், அன்றைய கூட்டமைப்புத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிரதமர் தேர்வு மொரார்ஜி தேசாயாக இருந்ததே! அவருக்கு கெளரவ பதவியாக இந்திய துணை பிரதம மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 1967ல் முதல்வர் பதவியில் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த சரண்சிங்குக்கு பிரதமர் பதவியின் ஈர்ப்பின் காரணமாகவும், அவருக்குப் பலவிதங்களில் உதவி புரிந்துவந்த ராஜ்நாராயண் முயற்சியினாலும் காலம் கனிந்தது; உட்கட்சிக் குழப்பங்களால் நன்றாக நடைபெற்றுவந்த மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், மொரார்ஜியவர்களே முன்வந்து பதவி விலகினார்; ராஜ் நாராயணின் தலைமையில் உருவான மதச்சார்ப்பற்ற ஜனதா கட்சிக்கு தலைமை ஏற்று , புதிய ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டார் சரண் சிங்;அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காங்கிரஸ் கட்சி சரண்சிங் அரசாங்கத்தை அமைக்க வாக்குறுதியளித்த பின்னர் பிரதம மந்திரி ஆனார்.சரண் சிங் உறுதியளித்தபடி தனது சீடர் ராஜ்நாராயணுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்!(இவர் மொரார்ஜியின் ஜனதா கட்சி ஆட்சியில் சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்).
சரண் சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட நாடளுமன்றதை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.இந்திய தேசிய காங்கிரஸ் அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்ட நாள்தான் நாடளுமன்றதை முதல் முறையாக சந்திக்கும் நாளாக சரண்சிங்குக்கு அமைந்ததது. மற்ற ஆதரவு ஏதுமில்லாத, காங்கிரசின் சூழ்ச்சியால் சவுத்ரி சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.புதிய தேர்தல்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் நடத்தப்பட்டன.
அவரது மரணம் வரை அவர் தனது லோக் தள் கட்சியின் தலைவராக நீடித்துவந்தார்.உத்தர பிரதேசம், லக்னோவில் உள்ள அமௌசி விமான நிலையம், அவரது மரணத்துக்குப் பின் சவுதாரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படுகிறது.உத்தர பிரதேசம், மீரட் பல்கலைக்கழகம்,சவுதாரி சரண் சிங் பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டது. வடக்கில் விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக புது தில்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கிசான் காட் பெயரிடப்பட்டுள்ளது. (ஆம் ஹிந்தியில் கிசான் என்பது விவசாயியைக் குறிப்பிடும் வார்த்தை). அவரது மகன் அஜித் சிங் கட்சித் தலைவராக 1987 முதல் வெற்றி தொடர்ந்து இருந்து வருகிறார்.
சரண் சிங் 29 மே 1987 அன்று மரணமடைந்தார். அவர் மனைவி காயத்ரி தேவி மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவரது மகன் அஜித் சிங் தற்போது தனது பாரதிய லோக் தள் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அஜித் சிங்குக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது பேரன் ஜெயந்த் சவுத்தரி மதுரா தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.