கிளிண்டன் ஜோசப் டேவிசன்(Clinton Joseph Davisson: அக்டோபர் 22, 1881 – பிப்ரவரி 1, 1958), ஓர் அமெரிக்க இயற்பியலறிஞர். மின்னணுக்கள்ஒளி அலைகளைப் போல குறுக்கீட்டு விளைவை உண்டாக்குகின்றன என்ற இவரது கண்டு பிடிப்பிற்காக 1937 இல் கியார்கு பாகே தாம்சன் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.