கரு வளர்ப்பு (Embryo culture) என்பது வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் ஓர் அங்கமாகும். கருவானது செயற்கை ஊடகம் ஒன்றில் சிறிது காலம் வளர்க்கப்பட்டு பின்னர் வளரிடம் மாற்றம் செய்யப்படும்.
காலம்
செயற்கை முறை கருவளர்ப்பில் கருவளர்ப்புக் காலம் கருவளர்ச்சியின் பல்வேறு நிலையினைப் பொறுத்து மாறுபடுகிறது. முக்கியமாக பிளவிபெருகலின் (2ஆம் நாள் முதல் 4 பிறகு) கருக்கோளச்செல் நிலை (5ஆம் நாள் முதல் 6 நாளுக்குப் பின்) வளர்க்கப்படுகிறது. [1]
கருவளர்ச்சியின் 3 நாள் கருவானது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குரோமோசோம் அல்லது மரபணு குறைபாடுகள் குறித்துச் சோதிக்கப்படுகின்றது. கரு பரிமாற்றத்தின் நேரடி பிறப்பு விகிதத்தில் கருவளர்ப்பு செல்களின் நிலையினைப் பொறுத்து அமைகின்றது. ஒட்டுமொத்த கர்ப்ப விகிதங்களில் குழுக்களிடையே வேறுபாடு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.[2] கருத்தரித்த பிறகு 3வது நாளுக்குப் பதிலாக 2வது நாள் கருமாற்றம் செய்ததில் பிறப்பு விகிதத்தில் எவ்வித வேறுபாடுகள் இல்லை. [3]
கருக்கோள செல்களை பிளவிப் பெருகல் நிலையில் பரிமாற்றம் செய்வதால் மோனோசைகோடிக் இரட்டையர் வாய்ப்பு அதிகரிக்கவில்லை எனத் தெரியவருகின்றது. [4]
குறைப்பிரசவம் (முரண்பாடுகள் விகிதம் 1.3) மற்றும் பிறவிக் குறைபாடுகள் (குறைபாடுகள் விகிதம் 1.3) ஆகியவை கருவிலிருந்து வளர்க்கப்பட்ட பிறப்புகளில் பிளவு நிலையுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டோசிஸ்ட் நிலை வரை கணிசமாக உள்ளன. [1]
நுட்பங்கள்
கருக்களைச் செயற்கை முறையில் வளர்க்க ஓர் செயற்கை வளர் ஊடகம் தேவை. பெண்ணின் கருப்பை புற அடுக்கிலிருந்து பெறப்பட்ட செல்களை வளர்த்தும் கருச்செல்களை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கை வளர் ஊடகம் பயன்படுத்தும் போது கருவளர் காலம் முழுவதும் ஒரே கருவளர் ஊடகம் பயன்படுத்தலாம் (ஒற்றை கலாச்சார ஊடகம்) அல்லது தொடர்ச்சியாகப் பல ஊடகங்களைப் பயன்படுத்தலாம். பல்வேறு கருவளர் ஊடகம் பயன்படுத்தப்படும்போது கருவானது தொடர்ச்சியாக வெவ்வேறு ஊடகங்களில் வளர்க்கப்படும். கருவளர் ஊடகமானது ஊடக கலவையின் செறிவு மற்றும் கலவையின் அடிப்படையில் வெவ்வேறு அளவில் தயார் செய்யப்படுகிறது. இது கருவளர்ச்சியின் போது கருவின் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. [5] உதாரணமாக, கருக்கோள செல் நிலையில் கருவளர்ப்பு செய்யும்போது 3ஆம் நாள் வரை கருவளர்ப்பிற்கு வளர் ஊடகம் ஒன்றும், பின்னர் மற்றுமொரு ஊடகம் பயன்படுத்தப்படுகிறது. [6] தனித்த அல்லது தொடர்ச்சியான ஊடகம் மனித கருக்களின் வளர்ச்சியில் ஒற்றைச் செல் நிலையிலிருந்து கருக்கோள நிலை வரை பயனுள்ளதாக உள்ளது. [7] செயற்கை கரு வளர்ப்பு ஊடகங்கள் குளுக்கோசு, பைருவேட் மற்றும் ஆற்றல் வழங்கும் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இதனுடன் அமினோ அமிலங்கள், நியூக்ளியோடைடுகள், உயிர்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பைச் சேர்ப்பது கரு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் செயல்திறனை மேம்படுத்துவதாக உள்ளது.[8] ஆக்ஸிஜனேற்றிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பெரிய மூலக்கூறு பொருட்கள், கார்மோன்கள் மற்றும் வளர்ச்சி காரணிகள் சேர்க்கப்பட்ட ஊடகங்களும் கிடைக்கின்றன. திரவ ஓட்டம் மற்றும் கரு இயக்கம் கொண்ட முறைகளும் கிடைக்கின்றன. [9] புதிய முறை கருவளர்ப்பில் கருப்பையில் கருவளர்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கருப்பை திரவங்களை கருவளர்ப்பு ஊடகமாகப் பயன்படுத்துகிறது.[10]
வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய கருவளர் ஊடகங்களில் சிறந்த ஊடகம் எது என்பதில் அடையாளம் காண முடியவில்லை. [11]
இயற் கருவளர் சூழலில் உள்ள ஆக்ஸிஜன் அளவான 20% விடக் குறைவான (சுமார் 5%) கருவளர் ஊடக ஆக்ஸிஜன் செறிவுகளின் பயன்பாடு, பயன் தந்துள்ளன எனவும் இதில் கருச்சிதைவுகள் அல்லது பிறவி குறைபாடுகள் அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. [12]
தாங்குகரைசல் அமைப்பு
கரு வளர் ஊடகத்தின் கார அமிலத் தன்மையினை (pH) குறிப்பிட்ட அளவில் நிலையாக வைத்திருத்தல் முக்கியமானதாகும். இதன் அடிப்படையில் வளர் ஊடகம் தாங்கு கரைசல் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
கார்பன் டை ஆக்சைடு/பைகார்பனேட்-தாங்கு ஊடகம்: பாலூட்டிகளின் செல்களைச் சுற்றியுள்ள உடலியங்கு இயல் ஊடக முறை பயன்படுத்துகிறது. அடைகாக்கும் சூழலில், 5-7% கார்பண்டை ஆக்சைடு தேவை
பாஸ்பேட்-தாங்கு ஊடகம்: கருவளர்ச்சியில் தீங்கு விளைவிக்கும் என்பதால் கார்பன் டை ஆக்சைடு சூழல் தேவையில்லை.
கெப்சு-தாங்கு ஊடகம்: மனித கருமுட்டை சேகரிப்பு மற்றும் கருவளர்ப்பினை கையாளுதலுக்கான தாங்கு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது;
மாப்சு- தாங்கு ஊடகம்: கெப்சைப் போலவே, தாங்கு திறன் குறைந்த வெப்பநிலையைச் சார்ந்தது என்பது சாதகமாக உள்ளது. [13]
வெப்ப நிலை
இயற்சூழலில் பெண்ணின் கருப்பையில் கருவானது 37°சென்டி கிரேடுக்கும் குறைவான வெப்பநிலையில் வளர்வதால், செயற்கைச் சூழலில் வெப்பநிலையினைக் குறைத்து அடைகாக்கப்படுகிறது. வெப்பநிலையினை குறைத்து வளர்த்தால் பிறப்பு விகிதங்களில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துமா என்பதற்கான சான்றுகள் நிச்சயமற்றவையாக உள்ளன. [14]
அபாயங்கள்
கரு வளர்ப்பில் விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட மரபியல் சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன இதனை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது.[15]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Dar, S.; Lazer, T.; Shah, P. S.; Librach, C. L. (2014). "Neonatal outcomes among singleton births after blastocyst versus cleavage stage embryo transfer: a systematic review and meta-analysis". Human Reproduction Update 20 (3): 439–448. doi:10.1093/humupd/dmu001. பன்னாட்டுத் தர தொடர் எண்:1355-4786. பப்மெட்:24480786.
- ↑ Glujovsky, Demián; Farquhar, Cindy; Quinteiro Retamar, Andrea Marta; Alvarez Sedo, Cristian Roberto; Blake, Deborah (2016-06-30). "Cleavage stage versus blastocyst stage embryo transfer in assisted reproductive technology". The Cochrane Database of Systematic Reviews (6): CD002118. doi:10.1002/14651858.CD002118.pub5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:27357126.
- ↑ Brown, Julie; Daya, Salim; Matson, Phill (2016). "Day three versus day two embryo transfer following in vitro fertilization or intracytoplasmic sperm injection". The Cochrane Database of Systematic Reviews 12: CD004378. doi:10.1002/14651858.CD004378.pub3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-493X. பப்மெட்:27976360.
- ↑ "Monozygotic twinning is not increased after single blastocyst transfer compared with single cleavage-stage embryo transfer". Fertil. Steril. 93 (2): 592–7. February 2009. doi:10.1016/j.fertnstert.2008.12.088. பப்மெட்:19243755.
- ↑ Sunde, Arne; Brison, Daniel; Dumoulin, John; Harper, Joyce; Lundin, Kersti; Magli, M. Cristina; Van den Abbeel, Etienne; Veiga, Anna (October 2016). "Time to take human embryo culture seriously: Table I" (in en). Human Reproduction 31 (10): 2174–2182. doi:10.1093/humrep/dew157. பன்னாட்டுத் தர தொடர் எண்:0268-1161. பப்மெட்:27554442.
- ↑ Comparison Of A Single Medium With Sequential Media For Development Of Human Embryos To The Blastocyst Stage பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம் Melanie R. Freeman and Don Rieger. Nashville Fertility Center, Nashville, TN, U.S.A. and LifeGlobal, Guelph, ON, Canada
- ↑ Schneider, D.T.; Verza, S.; Esteves, S.C. (2009). "Single or sequential medium are equally effective for the culture of human embryos to the blastocyst stage: a pilot study". Fertility and Sterility 92 (3): S231–S232. doi:10.1016/j.fertnstert.2009.07.1564.
- ↑ Xella S; Marsella T; Tagliasacchi D; Giulini, Simone; La Marca, Antonio; Tirelli, Alessandra; Volpe, Annibale (April 2010). "Embryo quality and implantation rate in two different culture media: ISM1 versus Universal IVF Medium". Fertil. Steril. 93 (6): 1859–63. doi:10.1016/j.fertnstert.2008.12.030. பப்மெட்:19152877.
- ↑ "Advances in embryo culture platforms: novel approaches to improve preimplantation embryo development through modifications of the microenvironment". Hum. Reprod. Update 17 (4): 541–57. 2011. doi:10.1093/humupd/dmr006. பப்மெட்:21454356.
- ↑ Blockeel, C.; Mock, P.; Verheyen, G.; Bouche, N.; Le Goff, P.; Heyman, Y.; Wrenzycki, C.; Höffmann, K. et al. (2008). "An in vivo culture system for human embryos using an encapsulation technology: A pilot study". Human Reproduction 24 (4): 790–796. doi:10.1093/humrep/dep005. பப்மெட்:19273881.
- ↑ [1] Mantikou, E.; Youssef, M. A. F. M.; Van Wely, M.; Van Der Veen, F.; Al-Inany, H. G.; Repping, S.; Mastenbroek, S. (2013). "Embryo culture media and IVF/ICSI success rates: A systematic review". Human Reproduction Update 19 (3): 210–220. doi:10.1093/humupd/dms061. பப்மெட்:23385469.
- ↑ [2] Mantikou, E.; Bontekoe, S.; Van Wely, M.; Seshadri, S.; Repping, S.; Mastenbroek, S. (2013). "Low oxygen concentrations for embryo culture in assisted reproductive technologies". Human Reproduction Update 19 (3): 209. doi:10.1093/humupd/dms055. பப்மெட்:23377864.
- ↑ Swain, Jason E.; Pool, Thomas B. (June 2009). "New pH-buffering system for media utilized during gamete and embryo manipulations for assisted reproduction". Reproductive Biomedicine Online 18 (6): 799–810. doi:10.1016/s1472-6483(10)60029-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1472-6491. பப்மெட்:19490784.
- ↑ Baak, NA; Cantineau, AE; Farquhar, C; Brison, DR (17 September 2019). "Temperature of embryo culture for assisted reproduction.". The Cochrane Database of Systematic Reviews 9: CD012192. doi:10.1002/14651858.CD012192.pub2. பப்மெட்:31529804.
- ↑ Anckaert, E.; De Rycke, M.; Smitz, J. (2012). "Culture of oocytes and risk of imprinting defects". Human Reproduction Update 19 (1): 52–66. doi:10.1093/humupd/dms042. பப்மெட்:23054129.