கமலா சொஹோனே

கமலா சொஹோனே
பிறப்பு1912 செப்டம்பர் 14
இந்தூர், மத்திய பிரதேசம், இந்தியா
இறப்பு1998 ஜூன் 28 (வயது 85)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
துறைஉயிர்வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்மும்பை பல்கலைக்கழகம், மும்பை. நியூஹோம் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபெண் விஞ்ஞானி
துணைவர்எம். வி. சொஹோனே

கமலா சொஹோனே (Kamala Sohonie) (1912 செப்டம்பர் 14 முதல் 1998 ஜூன் 28 வரை) 1939 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் ஒரு முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் இந்தியரும்[1], பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம்பெற்ற முதல் இந்தியரும்[2] ஒரு முன்னோடி இந்திய உயிர்வேதியியலாளரும் ஆவார்.[3] பெங்களூருஇந்திய அறிவியல் கழகத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம் பெண்கள் முதல் தடவையாக அதன் வரலாற்றில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்தார்.[4]

அவரது ஆய்வு பருப்பு வகைகள், நெல் போன்றவற்றிலிருந்து கிடைக்க வேண்டிய வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை கிடைக்காத மக்களுக்கு அதை எவ்வாறு ஈடுகட்டுவது என்பதாக இவரது ஆய்வு இருந்தது[5][6].பனை மரத்திலிருந்து பிரிக்கப்படும் நீராஎன்று பானத்தின் நன்மைகள் பற்றிய அவரது ஆராய்ச்சிப் பணியானது[7], குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் அவர்களின் ஆலோசனையினால் ஊக்கம் பெற்றது. பின்னர் இப்பணிக்காக அவரிடமே குடியரசுத் தலைவர் விருது பெற்றார் [1] பரணிடப்பட்டது 2019-03-12 at the வந்தவழி இயந்திரம்

ஆரம்ப வாழ்க்கை

கமலா சொஹோனே 1912 ஆம் ஆண்டில் இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது தந்தை நாராயணராவ் பகவத் மற்றும் அவரது மாமா, மாதவராவ் பகவத் ஆகியோர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் வேதியியலாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆவர். கமலா குடும்ப பாரம்பரியத்தை கடைபிடித்து வந்தார். பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் 1933 வேதியியல் (முதன்மை) மற்றும் இயற்பியலில் (துணை) பட்டம் பெற்றார்.

இறப்பு

கமலா இந்தியாவின் நுகர்வோர் வழிகாட்டல் சமுதாயத்தின் செயல் உறுப்பினராக இருந்தார் (CGSI). பின்னர்,அவர் 1982-83 ஆம் ஆண்டில் அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் கீமட் என்ற பத்திரிகையில் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1998 ஆம் ஆண்டில் புது தில்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விழாவின்போது கமலா சோஹோனே காலமானார்

மேற்கோள்கள்

  1. https://feminisminindia.com/2017/12/25/kamala-sohonie-phd-science/
  2. https://scientificwomen.net/women/sohonie-kamala-118
  3. https://www.thebetterindia.com/91026/kamala-sohonie-india-woman-scientist-iisc-cambridge/
  4. "How Kamala Sohonie Defied Gender Bias & Became the First Indian Woman PhD in Science". The Better India. 10 March 2017. https://www.thebetterindia.com/91026/kamala-sohonie-india-woman-scientist-iisc-cambridge/. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2019-03-11.
  6. https://www.ias.ac.in/article/fulltext/reso/021/04/0301-0314
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!