2013 ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் என்பது தில்லி, மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மிசோரம், இராச்சசுத்தான் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறுவதை குறிக்கும். இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. [1].சட்டிசுகர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் மற்ற நான்கு மாநிலங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும் , அனைத்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலிலேயே முதன் முறையாக வாக்காளர்களுக்கு எந்த வேட்பாளருக்கும் வாக்கு இல்லை என்னும் தெரிவு இடம்பெறுகிறது. இத்தேர்தலில் ஐந்து மாநிலங்களிலும் 630 சட்டமன்ற தொகுதிகளும் 11 கோடி வாக்காளர்களும் உள்ளனர் என்று தேர்தல் ஆணையர் சம்பத்து கூறியுள்ளார். 1,30,000 வாக்குச்சாவடிகள் இத்தேர்தலில் பயன்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மிசோரம் மாநில தேர்தலை தேர்தல் ஆணையம் டிசம்பர் 4க்கு பதில் நவம்பர் 25க்கு நகர்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 9 அன்று வெளிவரும்.[3]
ஏற்காடு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெறும்[4]. அதிமுகவின் சார்பில் பெ. சரோசாவும் திமுகவின் சார்பில் மாறனும் போட்டியிடுகிறார்கள்.[5]
குசராத் மாநில சூரத் மேற்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 அன்று நடைபெறும்[6]. அருணாச்சலப்பிரதேசத்தின் டம்பக் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் அக்டோபர் 31 அன்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 4 அன்றும் நடைபெறும்[7]
{{cite web}}
|=