Share to: share facebook share twitter share wa share telegram print page

ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு மொழி


ஐக்கிய அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவினர் பிரெஞ்சு மொழி பேசுபவராக உள்ளனர். அண்மைய கணக்கெடுப்பின்படி, 1.6 மில்லியன் மக்கள் பிரெஞ்சு மொழியை வீட்டில் பேசுகின்றனர். அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் சில ஆங்கிலம், எசுப்பானியம், சீனம், பிரெஞ்சு ஆகியன. அமெரிக்காவில், லூசியானா, நியூவ்இங்கிலாந்து, மிசௌரி ஆகியன பிரெஞ்சு பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதிகள். இங்கு பேசப்படும் பிரெஞ்சு மொழியின் வட்டார வழக்குகள் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. தற்போது லூசியானா, மெய்ன், நியூஹாம்ப்ஷையர், வெர்மோண்ட் பகுதிகளில் பிரெஞ்சு அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாக உள்ளது.

பிரெஞ்சு வம்சாவழியினர்

13 மில்லியனுக்கும் அதிகமானோர் தாங்கள் பிரெஞ்சு வம்சாவழியினர் எனக் கூறியுள்ளனர். இவர்களில் பிரெஞ்சு பேசும் நாட்டிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 9,412,000. இவர்களில் 1,979,951 மக்கள் வீட்டில் பிரெஞ்சு பேசுகின்றனர். இவர்கள் பிரான்சு, கெபெக், பெல்ஜியம், ஐத்தி, செனெகல் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் எனக் கூறியுள்ளனர்.

பிரெஞ்சு மொழியில் ஊடகத்துறை

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பிரெஞ்சு மொழி செய்தித்தாள்கள் வெளியாகின்றன, மியாமி, நியூ யேர்சி, லூசியானா பகுதிகளில், முழுநேர பிரெஞ்சு வானொலி நிலையங்கள் உள்ளன.

பிரெஞ்சு மொழியில் கல்வி

அமெரிக்காவில் பல மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் கற்கும் மொழி பிரெஞ்சு மொழி. ஆனால், அதிக அளவிலான எசுப்பானியர்களின் குடியேற்றத்தாலும், தென்னமெரிக்காவில் எசுப்பானிய மொழியின் செல்வாக்காலும், எசுப்பானியமே அதிகம் கற்கின்றனர். இருப்பினும், அமெரிக்காவில் எசுப்பானியத்திற்கு அடுத்ததாகக் கற்கப்படுவது பிரெஞ்சு மொழியே ஆகும். பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான கனடாவில் கனேடிய பிரெஞ்சு கற்றுத் தரப்பட்டாலும், அமெரிக்காவில் பிரான்சில் பேசப்படும் பொது பிரெஞ்சு மொழியைக் கற்பிக்கின்றனர். அண்மைக் கணக்கெடுப்பின்படி 216, 419 மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றனர்.[சான்று தேவை]

பிரெஞ்சு மொழி ஊர்ப் பெயர்கள்

மேலும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya