எலியாசு டேவிட் எசுரா (Elias David Ezra) இந்தியாவின்மேற்கு வங்காள மாநிலம்கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு வள்ளல் ஆவார். 1830 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்றூ இவர் பிறந்தார். கொல்கத்தா நகரத்தின் பாக்தாதி யூத சமூகத்தைச் சேர்ந்த இவர் அங்கு ஒரு சொத்து உரிமையாளராக வாழ்ந்தார். இவர் எலியாசு டேவிட் இயோசப்பு எசுரா என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
1882 ஆம் ஆண்டில் இறந்த வணிகர் டேவிட் இயோசப் எசுராவின் மூத்த மகனாக லியாசு டேவிட் எசுரா அறியப்படுகிறார். எலியாசு தனது தந்தையின் நினைவாக[1]
1884 ஆம் ஆண்டில் மேகன் டேவிட் வழிபாட்டு ஆலயத்தைக்[2] கட்டினார்.[3]
எலியாசு டேவிட் எசுரா பம்பாயின் சர் டேவிட் சாசூனின் மகள் மொசெல்லே சாசூனை மணந்து கொண்டார்.
சர் டேவிட் எசுரா மற்றும் ஆல்பிரட் எசுரா என்று இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.[4]
1886 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று எலியாசு டேவிட் எசுரா காலமானார்.