உலக வணிக மைய வதிவிடம்ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய் பன்னாட்டு மாநாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 38 மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். 2008 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உலக வணிக மைய வதிவிடம் ஜுமேரா லிவிங் என்னும் நிறுவனத்தால் மேலாண்மை செய்யப்படுகின்றது.[2] இக் கோபுரத்தின் மொத்த உயரம் 158 மீ (518 அடி). இக் கட்டிடம் ஒரு ஐந்து நட்சத்திரத் தரம் உள்ள வதிவிட வசதிகளைக் கொண்டுள்ளது.[3] இக் கட்டிடம் துபாயின் முதல் உயரமான கட்டிடமான உலக வணிக மையக் கட்டிடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2005 இல் தொடங்கிய அத்திவார வேலைகள் 2006 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நிறைவெய்திக் கட்டிடத்தின் நிலமேற் பகுதி வேலைகள் தொடங்கின.[4] இக் கட்டிடம் பழைய உலக வணிக மைய விடுதி இருந்த இடத்தில் அமைந்துள்ளது.[3] உலக வணிக மைய விடுதி உடைப்பு வேலைகள் 1 ஏப்ரல்2005 இல் இடம்பெற்றன. துபாயில் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.[5]