உத்தர காண்டம் , கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 4 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஒரு புராண தொலைக்காட்சித் தொடராகும், இது ஆகஸ்ட் 5 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்தி மொழியில் ஒளிபரப்பப்படும் ராம் சியா கே லவ் குஷ் தொடரின் தமிழ் மொழி மாற்றுத் தொடராகும்.[1][2][3]இந்தத் தொடரை சித்தார்த் குமார் திவாரியின் ஸ்வஸ்திக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ராமாயணத்தை சுற்றி கதை சித்தரிக்கப்படுகிறது. இதில் நட்சத்திரங்கள், ஷிவ்யா பதன்யா மற்றும் ஹிமான்ஷு சோனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ராவணனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற்ற பகவான் ராமரும் சீதாவும் அயோத்திக்கு திரும்பினர்,ஆனால் ஒரு மோசமான குற்றச்சாட்டு கர்ப்பிணி சீதாவை தனது வீட்டை விட்டும் அவரது கணவர் மற்றும் அயோத்தியை விட்டும் வெளியேறும்படி கட்டாயப்படுத்துகிறது. கர்ப்பிணியான சீதா வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் வனதேவி எனும் பெயரோடு வசிக்க ஆரம்பிக்கிறாள், லவ் மற்றும் குஷ் என இரு மகன்களைப் பெற்றெடுத்த சீதா, அவர்களை பெருமையுடன் வளர்க்கிறாள், இரட்டையர்கள் தங்கள் தந்தையைக் கண்டுபிடிக்கும் பணியைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். சத்தியத்திற்கான அவர்களின் தேடலானது பலனைத் தருமா? அவர்கள் பெற்றோரை எவ்வாறு மீண்டும் இணைப்பார்கள்? என்பது தான் கதை.
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தை விட்டு கதை வேறுபட்டு, மக்கள் நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாலும் வால்மீகி முனிவரின் மரியாதையை குறைக்கும் வகையில் இருப்பதனாலும் வால்மீகி சமுதாயத்தினர் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் சண்டிகரில் இத்தொடர் தடை செய்யப்படது. பின்னர் நாடு முழுவதும் இந்த விமர்சனம் எதிரொலித்து. எனவே தமிழில் செப்டம்பர் 16ல் இத்தொடரை ஒளிபரப்பும் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பிறகு தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தொடரை சரியான கதைப்படி கொண்டு வருவதாகவும் ஒப்பனைகளும் சரியானபடி செய்வதாகவும் முடிவெடுக்க பட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்ட பிறகு தற்போது இது நவம்பர் 4ல் இருந்து ஒளிபரப்பப்படுகிறது.
{{cite web}}
|first3=