யூஜின் (பண்டைக் கிரேக்கம்: εὐγενής; இலத்தீன்: Eugenius) என்னும் கிரேக்கப் பெயரின் பொருள் "உயர்குலத்தவர்" என்பதாகும்.
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
திருத்தந்தை இரண்டாம் யூஜினுக்கு முன் ஆட்சி செய்த திருத்தந்தை முதலாம் பாஸ்கால் என்பவர் திருத்தந்தைத் தேர்தலில் உரோமைப் பிரபுக்கள் தலையிடுவதைக் கட்டுப்படுத்தியிருந்தார். அவர் இறந்ததும், உரோமைப் பிரபுக்களின் குழு ஒன்று தங்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அவெந்தீனோ குன்றில் அமைந்த புனித சபீனா ஆலயத்தின் முதன்மை குருவாயிருந்த யூஜினை தேர்தலில் போட்டியிட அழைத்தனர்.
திருத்தந்தைத் தேர்தலில் உரோமைப் பிரபுக்களின் தலையீடு கூடாது என்று 769இல் திருத்தந்தை நான்காம் ஸ்தேவான் ஆட்சியில் நிகழ்ந்த உரோமைச் சங்கம் தீர்மானித்திருந்தது என்றாலும், உரோமையில் அமைதி நிலவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் உரோமைக் குருக்கள் யூஜினை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். கி.பி 824 பிப்ரவரி 21இல் அவர் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்டார்.
இரண்டாம் யூஜின் புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய சில ஒழுங்குமுறைகளை உரோமைப் பேரரசின் உதவியோடு எற்படுத்தினார் இதை விளக்கி சொல்வதற்காக கி.பி 826 ம் ஆண்டில் ஆயர்கள், குருக்கள் அடங்கிய மாமன்றத்தைக் கூட்டினார், அதில் ஒரு திருத்தந்தையைத் தேர்தெடுப்பதற்கான விதி முறைகளைப் பெரும்பாலான ஆயர்காளும் குருக்களும் அறிந்திருக்கவில்லை என்பது அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இத்தகையவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தார் மேலும் அவர்கள் திருசபையின் சட்ட விதிகளை பற்றிய தெளிவு பெரும் வரை ஒதுக்கி வைதார் முன்று ஆண்டு ஆட்சிக்கு பிறகு கி.பி 827 ஆகஸ்ட் 27ல் இறந்தார்.