திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius IV, 1073[1] – 3 டிசம்பர் 1154), கத்தோலிக்கத் திருச்சபையின்திருத்தந்தையாக 1153 ஆம் ஆண்டு சூலை 9 முதல் 1154 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
திருத்தந்தை மூன்றாம் யூஜின் இறந்தபிறகு, இவர் திருத்தந்தையாக ஜூலை 1153இல் தேர்வானார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நோயுற்றவராகவும் 80 வயதான முதியவராகவும் இருந்தார். அத்தேர்தலின் போது இவரே அனைவரிலும் மூத்த கர்தினாலும், கர்தினால் குழுவின் முதல்வராகவும் இருந்தார். இவர் திருத்தந்தை ஹேட்ரியனின் சகோதரனுடைய மகன் என்னும் கருத்து 16-ஆம் நூற்றாண்டு முதல் சிலரால் ஏற்கப்பட்டாலும், இது இப்போது ஆதாரமற்றதாய் கருதப்படுகின்றது.
பிரடெரிக் பார்பரோசா என்பவர் மற்றொரு சார்லமேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆல்பஸ் மலையைக் கடந்து இத்தாலிக்குள் பெரிய போர்ப்படையுடன் செல்ல தயாரானார். இவர் இத்தாலிக்குள் வரும் வேளையில் திருத்தந்தை மரணமடைந்தார். 1154 டிசம்பர் 3-ல் இவருடைய ஆட்சி ஒன்றரை ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது.
மேற்கோள்கள்
↑This date is according to Encyclopædia Britannica; Klewitz, p. 220 says that he was 80 years old at the time of his election to the papacy
↑Tillmann, H. (1972). "Ricerche sull'origine dei membri del collegio cardinalizio nel XII secolo". RSC26: 313–353 [p. 328].
↑H.W.Klewitz, p. 128 no. 31; Brixius, p. 36 no. 26. His first subscription of the papal bulls took place on 25 பெப்ரவரி 1114 (Jaffé, p. 478)
↑First subscription as cardinal-bishop on 7 மே 1128 (Jaffé, p. 549)