கர்தினால் குழு முதல்வர் (ஆங்கில மொழி: Dean of the College of Cardinals; இலத்தீன்: Decanus Sacri Collegii) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின்கர்தினால்கள் குழாமின் தலைவர் ஆவார். இப்பதவி 12ம் நூற்றாண்டில் நிருவப்பட்டது ஆகும். இப்பணிப்பொருப்பில் இருப்பவர் தலைவர் என அழைக்கப்பட்டாலும் மற்றக் கர்தினால்கள் மீது எவ்வித ஆட்சி உரிமையும் இவருக்கு கிடையாது; இவர் சரிநிகரானவர்கள் நடுவில் முதலிடம் பெறுபவர் என கருதப்படுகின்றனர்[1].
கர்தினால் குழு முதல்வராக தேர்வு செய்யப்படுபவருக்கு அவர் ஏற்கனவே கொண்டுள்ள மற்றொரு ஆலயத்தின் உரிமைத் தகுதியுடன், ஒஸ்திபா மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியும் அளிக்கப்படும். இதலால் முதல்வர் கர்தினால் ஆயர் அணியின் உறுப்பினராவார்.
தேர்தல்
பொதுவாக நீண்ட நாள் கர்தினால் பணிபுரிந்தவரே முதல்வராக தேர்வு செய்ப்பட்டாலும், இவ்வாறு தேர்வு செய்யப்பட எவ்வித கட்டாயமும் இல்லை. வழக்கப்படி புறநகர் மறைமாவட்டங்கலில் நீண்ட நாள் கர்தினால் பணிபுரிந்தவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார். இது திருத்தந்தை ஆறாம் பவுலினால் 1917இல் சட்டமாக்கப்பட்டு 1965 வரை நடப்பில் இருந்தது. ஆயினும் இது இரண்டாம் அருள் சின்னப்பரால் நீக்கப்படு பின்வரும் பமுறை கடை பிடிக்கப்படுகின்றது.
முதல்வரின் பதவியிடம் காலியானால், புறநகர் ஆலய உரிமைத் தகுதி பெற்ற கர்தினால்கள் மட்டுமே, தங்கள் குழுவைச் சார்ந்த ஒருவரைக் குழாமின் முதல்வராகச் செயல்படத் தேர்ந்தெடுக்க முடியும்; இத்தேர்தலுக்குத் துணைமுதல்வர் இருந்தால் அவரோ அல்லது அவர்களில் வயதால் மூத்தவரோ தலைமை ஏற்பார்; தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரை திருத்தந்தையிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். இம்முறைப்படியே துணைமுதல்வர் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இப்பதவியில் இருப்பவர் தனது மரணம் வரையோ அல்லது பணி துறப்பு வரையோ கர்தினால் குழு முதல்வராக இருக்கலாம். இதிலிருந்து ஓய்வு பெற கட்டாய வயது வரம்பு இல்லை.
சிறப்பு உறிமைகள்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆயராக இல்லாதிருப்பின், அவருக்கு ஆயர்பட்டம் அளிப்பது கர்தினால் முதல்வருக்கு உரிய உறிமையாகும்.