அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கிறித்துமசு (Christmas on the International Space Station) கொண்டாட்டம் என்பது அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கொண்டாடப்பட்ட கிறித்துமசு பண்டிகை தொடர்பான கொண்டாட்டம் ஆகும். கிறித்துமசு என்பது ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு மதம் சார்ந்த கொண்டாட்டம் ஆகும். அனைத்துலக விண்வெளி நிலையக் குழுவினர், அவர்களது குடும்பங்கள், மற்றும் தரையில் இருந்து விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாவரும் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். குழுவினருக்கு அவரவர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் இனப்படி விழாவைக் கொண்டாட செயல்படா நேரம் வழங்கப்படுகிறது. உருசியன் மரபுவழி திருச்சபை, சூலியன் நாட்காட்டியின் படி கிறித்துமசை கொண்டாடுகிறது. அதே நேரத்தில் கத்தோலிக்க திருச்சபை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகிறது. எனவே இக்குழுவினர் திசம்பர் 25 அல்லது சனவரி 6, 7 அல்லது 19 தினங்களைத் தேர்ந்தெடுத்து அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கிறித்துமசை கொண்டாடுகின்றனர்.
2000 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி விண்வெளியோடத்தின் முதல் பயணிக் குழுவினர் அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். நிலையத்தில் ஏறிய பின்னர் அவர்கள் அந்த ஆண்டு முதலாவது கிறித்துமசு விழாவை பின்னதொரு நாளில் கொண்டாடினர்.[2] விண்வெளியோடத்தின் முப்பதாவது பயணிக் குழுவினரான தொனால்டு பெட்டிட், ஒலெக் கொனோணென்கோ மற்றும் ஆண்ட்ரெ குய்பெர் முதலியவர்களும் கிறித்துமசை அனைத்துலக விண்வெளி நிலையத்தில் கொண்டாடினர்.[3][4]
2013 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் நாளில் விண்வெளி வீரர்கள் அரிய கிறித்துமசு கொண்டாட்டமாக விண்வெளியில் நடந்தனர். அனைத்துலக விண்வெளி நிலையத்தின் குளிர்விக்கும் அமைப்பிற்காக ஒரு புதிய அமோனியா குழாயை அவர்கள் நிறுவினர். முன்னதாக அக்குழாயில் பழுது ஏற்பட்டு நிலையத்தின் பரிசோதனைகள் பலவற்றை தடுத்து நிறுத்தியிருந்தது.[5]
{{cite web}}
|=
|archive-date=