ஐந்து (ஒலிப்புⓘ) (ஆங்கிலம்: Five) என்பது தமிழ் எண்களில் ௫ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
காரணிகள்
ஐந்தின் நேர்க் காரணிகள் 1, 5 என்பனவாகும்.[2]
இயல்புகள்
- ஐந்து ஓர் ஒற்றை எண்ணாகும்.
- ஐந்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
- ஐந்தானது ஐந்தாவது பிபனாச்சி எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது கேடலான் எண் ஆகும்.
- ஐந்தானது மூன்றாவது பெல் எண்ணாகும்.
- ஐந்தானது நான்காவது ஆய்லர் எண்ணாகும்.
- ஐந்து ஒரு சோஃவி ஜெர்மேன் முதன்மை எண் ஆகும். ஏனெனில், என்பதும் ஒரு முதன்மை எண்ணாகும்.
- ஐந்து ஒரு வில்சன் முதன்மை எண்ணாகும். ஏனெனில் ஆனது ஐப் பிரிக்கக்கூடியது.
- நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான ஐங்கோணியை உருவாக்கலாம்.
- பைதகரசின் மும்மைகளில் செம்பக்கத்திற்கான மிகச் சிறிய பெறுமானம் ஐந்து ஆகும். [3]
மேற்கோள்கள்