26 நவம்பர் 2024ல் அமெரிக்கா மற்றும் பிரான்சு நாடுகள் மத்தியஸ்தர்களாக இருந்து,.இஸ்ரேல்-லெபனான் இடையே 27 நவம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும்.[1]
8 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலியப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே தெற்கு லெபனான் பகுதிகளில் போர் ஏற்பட்டது. 1 அக்டோபர் 2024 அன்று இஸ்ரேலியப் படைகள், லெபனானின் தெற்கு எல்லையை கடந்து தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது தாக்குதல்கள் தொடுத்தது.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி[2][3],இஸ்ரேல் தனது படைகளை தெற்கு லெபனாலிருந்து வெளியேற வேண்டும், [4][5][6]மற்றும் ஹிஸ்புல்லா படையினர் லித்தானி ஆற்றின் வடக்கு பக்கமாக பின்வாங்க வேண்டும்.[7]மேலும் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் லெபனான் அரசுத் துருப்புகளும் மற்றும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் குழு, போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும்[8][5]. ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.[9]