Share to: share facebook share twitter share wa share telegram print page

2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்

2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்
2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் is located in பப்புவா நியூ கினி
2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.6 Mww
ஆழம்90.0 km (55.9 mi)
நிலநடுக்க மையம்6°15′22″S 146°28′08″E / 6.256°S 146.469°E / -6.256; 146.469
பாதிக்கப்பட்ட பகுதிகள்பப்புவா நியூ கினி
அதிகபட்ச செறிவுVIII (கடுமையானது)

2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் (2022 Papua New Guinea earthquake) 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9:46 மணிக்கு பப்புவா நியூ கினியில் 7.6 அல்லது 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1][2][3] அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கம் உந்தத்திறன் ஒப்பளவு அளவில் 7.6 ஆக இருந்தது. 90.0 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.[4] இதற்கிடையில், புவிவாய்ப்பு என்கிற அமைப்பு நிலநடுக்க அளவு 7.7 என்றும் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது என்றும் அளவிட்டுள்ளது. புவியின் இடை ஆழத்தில் மேற்கு வடமேற்கு-கிழக்கு தென்கிழக்கு மோதல் அல்லது வடக்கு-வடகிழக்கு தள மூழ்கல் அல்லது கிழக்கு-மேற்கு தாக்கம் மற்றும் தெற்கு தளம் அமிழ்தல் போன்ற காரணங்கள் ஒன்றின் விளைவாகும்.[5]

விளைவுகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தைச் சுற்றியுள்ள 1000 கிலோமீட்டர் சுற்றளவில் பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேசியா கடற்கரை பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் செய்தியை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டது.[6] சுனாமி அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக பிறகு இம்மையம் அறிவித்தது.[7]

சில உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சந்தேகிக்கிறது.[8]

மேற்கோள்கள்

  1. "பப்புவா நியூ கினியா தீவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை". Dinamalar. 2016-12-17. Retrieved 2022-09-11.
  2. தினத்தந்தி (2019-05-15). "பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் பயங்கர நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை". www.dailythanthi.com. Retrieved 2022-09-11.
  3. மலர், மாலை (2019-05-07). "பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை". www.maalaimalar.com. Retrieved 2022-09-11.
  4. "M 7.6 - 67 km E of Kainantu, Papua New Guinea". earthquake.usgs.gov. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 10 September 2022. Retrieved 11 September 2022.
  5. "EASTERN NEW GUINEA REG., P.N.G. 2022/09/10 23:46:55 UTC, Mw=7.7". GEOSCOPE Observatory. 10 September 2022. Retrieved 11 September 2022.
  6. "TSUNAMI MESSAGE NUMBER 1 NWS PACIFIC TSUNAMI WARNING CENTER HONOLULU HI 2355 UTC SAT SEP 10 2022". Pacific Tsunami Warning Center. 10 September 2022. Retrieved 11 September 2022.
  7. "TSUNAMI MESSAGE NUMBER 2 NWS PACIFIC TSUNAMI WARNING CENTER HONOLULU HI 0025 UTC SUN SEP 11 2022". Pacific Tsunami Warning Center. 11 September 2022. Retrieved 11 September 2022.
  8. "Strong earthquake detected in Papua New Guinea". அசோசியேட்டட் பிரெசு. 11 September 2022. https://apnews.com/article/earthquakes-papua-new-guinea-climate-and-environment-a21e3974c67cb6db47e9865378204f14. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya