பெசாவர் பள்ளிவாசல் தாக்குதல் |
---|
இடம் | பெசாவர் |
---|
நாள் | பெப்ரவரி 13, 2015 (2015-02-13) |
---|
இறப்பு(கள்) | 19[1] |
---|
காயமடைந்தோர் | 63[2] |
---|
பெசாவர் பள்ளிவாசல் தாக்குதல் (2015 Peshawar mosque attack) என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இமாமியா எனும் பெயருடைய பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிப்பதாகும். இந்தத் தாக்குதல் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது. இத்தாக்குதலில் 19[3] பேர் கொல்லப்பட்டனர். மேலும் 63[4] பேர் காயமடைந்தனர்.
தாக்குதல்
பாக்கிஸ்தானின் ஹயாட்டபாத் மாவட்டத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது ஆயுததாரிகள் மூவர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு காவலர்களும் நடத்திய தாக்குதலில் ஆயுததாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் தன்னைத்தானே வெடித்து உயிரை மாய்த்துக் கொண்டார் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டார்.
பொறுப்பேற்பு
இத்தாக்குதல் நிகழ்விற்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.[5]
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்