வெடிகுண்டு


த மேசிவ் ஆர்ட்னன்ஸ் ஏர் ப்ளாஸ்ட் (The Massive Ordnance Air Blast) (MOAB) வெடிகுண்டு அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது. இது உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த அணு அல்லாத வெடிகுண்டுகளில் ஒன்றாகும்.

வெடிகுண்டு (bomb) என்பது வெடிபொருளின் வெப்பம் உமிழ்கின்ற வேதியியல் எதிர்வினையைச் சார்ந்து வெடிக்கும் நிலையிலுள்ள கருவிகள் ஆகும். இது வெடிக்கும்போது உடனடியாக வன்முறையான முறையில் ஆற்றலை வெளிப்படுத்தும். வெடிகுண்டு என்ற சொல் கிரேக்க சொல்லான βόμβος (பாம்போஸ் ) என்பதிலிருந்து வந்ததாகும். ஆங்கிலத்தில் உள்ள "பூம்" என்ற சொல்லும் ஏறக்குறைய இதே அர்த்தத்தில் உள்ளது. ஒரு அணு ஆயுதம் வேதியியல் அடிப்படையிலான வெடிபொருட்களுடன் பயன்படுத்தப்பட்டு அணு சார்ந்து மிகப்பெரிய அளவில் வெடிக்கிறது.

கட்டுமானம் அல்லது சுரங்கம் போன்ற பொதுத்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் பொதுவாக "வெடிகுண்டு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதில்லை. எனினும் அப்பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் அவற்றை வெடிகுண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தில் "வெடிகுண்டு" என்ற சொல்லையும் குறிப்பாக வானிலிருந்து குண்டு போடுதலுக்கு வான்வழி வெடிகுண்டு (aerial bomb) என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றனர். விமானப்படைகள், கடற்படைகள் போன்றவற்றில் ஆற்றலில்லாத வெடிக்கும் ஆயுதங்கள் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றது. எறிகுண்டுகள், குண்டுகள், ஆழ்வெடிகுண்டுகள் (நீரில் உபயோகிக்கப்படுகிறது), ஏவுகணைகளின் முனையிலிருக்கும் வெடிபொருட்கள் அல்லது நிலக்கண்ணி வெடிகள் போன்ற இராணுவத்தில் பயன்படும் வெடிக்கும் ஆயுதங்கள் "வெடிகுண்டுகள்" என வகைப்படுத்தப்படுவதில்லை. பொதுவாக மரபு சாராப் போர்களில், வரையரையற்ற முறையில் பயன்படுத்தப்படும் வெடிக்கும் உபகரணங்களை அல்லது தாக்கக்கூடிய ஆயுதங்களை "வெடிகுண்டு" எனக் குறிப்பிடலாம்.

விளைவுகள்

படாரெனவெடித்தலினால் வெடித்த நிலம் முதலில் சேதமடைதல் மற்றும் காற்று மண்டலத்தில் இயந்திரப் பொறியால் ஏற்படுகிற அழுத்தப் பரப்பு, அழுத்தத்தினால் இயங்கும் பொருட்களால் உண்டாகும் பாதிப்பு மற்றும் ஊடுருவுதல் (துண்டாக்கல்), உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்களச் சேதப்படுத்துதல், நெருப்பு, புகை மற்றும் தூசு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.[1]

அதிர்ச்சி

வெடிப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைகளானது உடல் இடப்பெயாச்சி அடைதல் (எடுத்துக்காட்டாக மக்கள் காற்றில் வீசப்படல்), உடற் பகுதி துண்டாகுதல், உட்புற இரத்தப் போக்கு மற்றும் செவிப்பறைகள் கிழிந்து விடுதல் போன்றவற்றிற்கு காரணமாகலாம்.[1]

வெடிக்கும் நிகழ்வுகளில் நேர்மறை அலை மற்றும் எதிர்மறை அலை என்ற இரண்டு மாறுபட்ட நிலைகளில் அதிர்ச்சி அலைகள் வெளிப்படும். நேர்மறை அலை வெடித்த இடத்திலிருந்து வெளியே தள்ளும், தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தால், தங்களுக்குள் உடைந்த அதிர்ச்சி குமிழிகள் துவக்க இடத்தை நோக்கி "திரும்ப உறிஞ்சப்படும்". இந்த எடுத்துக்காட்டை திரித்துவ அணுச் சோதனையில் இருந்து உணரலாம். கட்டிடங்கள் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் இரண்டுமே தெளிவாகத் தெரியும்.[2]

அதிர்ச்சி மூலத்திலிருந்து விலகுவதே அதிர்ச்சி பாதிப்புக்கு எதிரான தலை சிறந்த பாதுகாப்பு ஆகும்.[3] ஓக்லஹோமா நகர குண்டுவெடிப்பில் ஏற்பட்ட மிகையழுத்தம் உத்தேசமாக 4000 psi வீச்சில் இருந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[4]

வெப்பம்

வெடிப்பினால் உடனடியாக வெளியிடப்படும் வெப்பம் ஒரு வெப்ப அலை உருவாகக் காரணமாகும். இராணுவ வெடிகுண்டு சோதனைகளில் 2,480 °C (4,500 °F) வெப்பநிலைகள் வரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடுமையான பெருங்கேடுதருகின்ற எரிகாயம் மற்றும் உயர்நிலைத் தீ போன்றவை ஏற்படுத்தும் திறனுள்ள போதும், அதிர்ச்சி மற்றும் துண்டாக்கல் போன்ற நிலைகளின் விளைவுகளுடன் ஒப்பிடும் போது வெப்ப அலை விளைவுகள் மிகவும் குறைவானதாகக் கருதப்படுகின்றன. இந்த விதி சவாலாகவே இருக்கிறது, எனினும் எதிர்மறை அதிர்ச்சி அலை விளைவுகள் மற்றும் வெடிக்கும் இடத்தில் உள்ள பொருட்களை எரிக்கும் அளவிற்கு உயர்வான வெப்பநிலை என்ற இணைதலில் இராணுவத்தால் உருவாக்கப்படும் உயரழுத்த ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன.

துண்டாக்கல்

வெடிகுண்டு அமைக்கப்பட்ட உறையின் நொறுக்கப்பட்ட துண்டுகளின் முடுக்கத்தில் மற்றும் அருகாமையில் உள்ள உடல் பொருட்களில் துண்டாக்கல் உருவாகிறது. இது தொழில்நுட்ப ரீதியாக மாறுபட்டாலும் நடைமுறையில் சிதறு குண்டில் (shrapnel) இருந்து பிரித்தறிய முடியாததாக இருக்கிறது. குறிப்பாக காயத்தை அதிகப்படுத்துவதற்கு இரும்பு பந்துகள் அல்லது ஆணிகள் போன்ற பெளதீகவியல் பொருட்கள் வெடிகுண்டுடன் இணைக்கப்படுகின்றன. மரபொழுங்கு சார்ந்து பார்க்கையில் சிறிய உலோக உடைபொருட்களானது ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் நகருகின்றன. மேலும் வெடிப்பு நடந்த இடத்திலுள்ள பொருட்கள் உடைந்து வெகு தூரத்திற்கு தூக்கி வீசப்படுகின்றன. 1947 ஏப்ரல் 16 அன்று S.S. கிரேண்ட்கேம்ப் வெடித்து டெக்சாஸ் நகர பேரழிவு ஏற்பட்டபோது, இரண்டு டன் எடையுள்ள நங்கூரத்தின் ஒரு "துண்டு" தூக்கி வீசப்பட்டு, இரண்டு டன் எடையுள்ள நங்கூரத்தின் ஒரு "துண்டு" தூக்கி வீசப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள பான் அமெரிக்கன் சுத்திகரிப்பு ஆலையின் வாகனம் நிறுத்தும் பகுதியில் உட்புறமாக செருகியிருந்தது.

வகைகள்

துவக்கத்தில் குழாய் வெடிகுண்டுக்காக உருவாக்கப்பட்டு டைம் பாமுக்காக நிறுவப்பட்ட கருவி. அமெரிக்க அரசாங்கத்தின் வெளியீட்டிலிருந்து.

வல்லுநர்கள் பொதுவாக பொதுத்துறை மற்றும் இராணுவ பயன்பாட்டு வெடிகுண்டுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டுபிடித்து விடுவர். இராணுவ வெடிகுண்டுகள் பெரும்பாலும் எப்போதும் மொத்தமாக தயாரிக்கப்படும் ஆயுதங்களாக இருக்கும். அவை தரமான வெடிக்கும் கருவியாகத் தயாரிக்கும் நோக்கில் தரமான பொருட்களைக் கொண்டு தரமான வடிவமைப்பில் உருவாக்கி அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் அடிப்படை அளவு மற்றும் விநியோகத்தை பொருத்து மூன்று அடிப்படைப் பகுதிகளாக IEDகள் பிரிக்கப்படும். வகை 1 IEDகள் கைப்பொட்டலம் அல்லது கைப்பெட்டி வெடிகுண்டுகளாக இருக்கும், வகை 2 IEDகள் மனித வெடிகுண்டு அணியும் "தற்கொலை உள்ளாடைகளில்" பொருத்தப்பட்டு இருக்கும் மற்றும் வகை 3 கருவிகள் பெரிய அசைவற்ற அல்லது தானியங்கி வெடிகுண்டுகளாக செயல்படும், வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனங்களாக இருக்கும், இவை VBIED (வாகனத்தில் பொருத்தப்பட்ட IEDக்கள்) எனவும் அழைக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு பொருட்கள் பொதுவாக மிகவும் நிலையற்றவை மற்றும் தன்னியல்புடையவை ஆகும். இவை தாக்கம் மற்றும் நிலை மின்னியல் உராய்வு அதிர்ச்சி போன்ற சுற்றுச்சூழல் விளைவுகளினால் தூண்டப்பட்டு நோக்கமில்லாமல் வெடித்துவிடுபவை ஆகும். நுண்ணிய இயக்கம், வெப்பநிலை மாறுபாடு அல்லது அருகில் உள்ள கைபேசிகள் அல்லது வானொலிகளைப் பயன்படுத்துதல் போன்றவை கூட ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படும் கருவிகளைத் தூண்டிவிடும். யாரேனும் ஒரு தகுதியற்ற நபர் வெடிகுண்டு பொருட்களுடன் அல்லது கருவிகளுடன் செயல்பட்டால் அது புதைக்குழிக்குச் சமமாகும். அவர் உடனடியாக மரணமடையவும் அல்லது கடுமையான காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு பொருள் வெடிக்கும் கருவி என்று நம்பினால் சாத்தியமான தூரம் வரை அதனை விட்டு தள்ளி இருத்தலே பாதுகாப்பான வழி ஆகும்.

அணுகுண்டுகள் அணுப் பிளப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். இதில் பெரிதளவில் அணுவை பிளக்கும் போது அவை பெரும் ஆற்றலை வெளியிடும். ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் தொடக்க நிலை பிளப்பு வெடித்தலில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மிகவும் அதிக ஆற்றலுள்ள அணுக் கருச் சேர்க்கை வெடித்தலை உருவாக்கும்.

டர்ட்டி பாம் (dirty bomb) என்பது மற்ற வெடிகுண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக வெடிக்கக் கூடிய விளைவைச் சார்ந்திருக்கும் சிறப்புக்கருவி ஆகும். இது தீங்கு விளைவிக்கும் பொருட்களை பெரும்பரப்புக்கு சிதற விடுகிறது. கொலை செய்யப்பட்ட அல்லது காயம் ஏற்பட்ட மற்றும் தூய்மையற்ற பகுதிகளில் சுத்தப்படுத்துதல் நடைபெற்று முடியும் வரை உள்நுழைவதைத் தடுப்பதற்கு கதிரியக்கம் அல்லது இரசாயன பொருட்களுடன் டர்ட்டி பாம்களும் பயன்படுத்தப்படுகின்றன. நகர்ப்புற அமைப்புகளில் இந்த தூய்மைப்படுத்துதல் மிகவும் அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் அந்தத் தூய்மையற்ற பகுதி வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கும்.

பெரிய வெடிகுண்டுகளின் ஆற்றல் வழக்கமாக TNT (Mt) உடைய மெகாடன்களில் அளவிடப்படுகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியின் மேல் அமெரிக்காவினால் போடப்பட்ட இரண்டு அணுகுண்டுகளே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்ட மிகவும் ஆற்றல் வாய்ந்த அணுகுண்டுகள் ஆகும். மேலும் இதுவரை சோதனை செய்யப்பட்டதில் ஸார் பாம்பாவும் (Tsar Bomba) மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த அணுக்கரு அல்லாத வெடிகுண்டு அமெரிக்க விமானப்படையின் MOAB (அலுவல் ரீதியாக பேரளவு பாதுகாப்பு வான் வெடிகுண்டு எனவும் பொதுவாக "அனைத்து வெடிகுண்டுகளின் தாயார்" எனவும் அழைக்கப்படுகிறது) ஆகும். மேலும் ரஷ்யர்களால் "அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை" எனப்படுகிறது.[5]

உபயோகம்

24 ஆகஸ்ட் 1942 அன்று கிழக்கு சாலமன்ஸ் போரின் போது USS எண்டர்பிரைஸ் விமானதளத்தில் ஜப்பானிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து சிறிதளவு சேதாரத்துக்கு காரணமாயிற்று.

1849 ஆம் ஆண்டு வெனிஸ் முற்றுகையில் ஆஸ்திரியர்கள் முதன் முதலில் வானிலிருந்து வெடிகுண்டுகள் போட்டனர். இருநூறு ஆட்கள் இல்லாத சிறு பலூன்களில் குண்டுகள் போடப்பட்டன. அவற்றில் சில குண்டுகளே வெனிஸைத் தாக்கின.[6]

1911 ஆம் ஆண்டில் இத்தாலியர்கள் அரேபியர்களுடன் தற்போதைய லிபியா நாடு, போரிட்ட போது முதல் நிரந்தர வானூர்தி படை மூலம் குண்டை ஏவினர். அந்த குண்டுகள் கைகளால் போடப்பட்டன.[7]

அதற்கு ஒன்பது ஆண்டுகள் கழித்து 1920 செப்டம்பர் 16 அன்று அமெரிக்காவில் முதல் குறிப்பிடத்தக்க தீவிரவாத வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. நியூயார்க்கின் பொருளாதார மாவட்டத்தில் கூட்டம் நிரம்பிய மதிய நேரத்தில் வெடிபொருட்கள்-நிரப்பப்பட்ட குதிரை வண்டி ஒன்று வெடிக்கச் செய்யப்பட்டது. வால் ஸ்ட்ரீட் குண்டுவெடிப்பில் சிதறுகுண்டுகளால் இணைக்கப்பட்ட வார்ப்பிரும்புத் தண்டு போன்ற பல நவீன தீவிரவாதக் கருவிகள் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்தக் கொடூரமான தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர் 400க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

அதிக-கொள்ளளவுள்ள உட்புற வெடிகுண்டு இடைவெளி கொண்ட நவீன இராணுவ குண்டு பொருத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டது. பொதுவாக பைலன்கள் அல்லது வெடிகுண்டு அடுக்குச்சட்டங்களின் வெளிப்புறமாக குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பைலனில் பல குண்டுகள் வெளியேறும் திறனுடைய பன்மடங்கு வெளியேற்ற அடுக்குச்சட்டம் கொண்ட வடிவமைப்பில் இருக்கும். நவீன அணுகுண்டுகளில் நுட்ப வழியில் உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்கள் விமானத்தில் இருந்து போடப்பட்ட பிறகு ரிமோட்கண்ட்ரோல் மூலமாகவோ அல்லது தானியங்கு வழிகாட்டி உடையதாகவோ அமைக்கப்பட்டுள்ளன. அணு ஆயுதங்கள் போன்ற வெடிகுண்டுகளானது விசையாற்றல் தளங்களில் ஏற்றப்படும் போது அவை வழிப்படுத்தப்பட்ட ஏவுகணைகள் என அழைக்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட "பேராபிராக்" எனப்படும் 11 கிகி எடை கொண்ட துண்டாக்கும் வெடிகுண்டு, வியட்நாம் கால டெய்சி கட்டர்கள் மற்றும் சில நவீன கொத்துக் குண்டுகளிலிருந்து வெளிவரும் சிறு குண்டுகள் போன்றவை வான்குடையுடன் அமைந்த சில குண்டுகள் ஆகும். வான்குடையுடன் கூடிய குண்டுகள் மெதுவாக இறக்கப்பட்ட பின் அவை வெடிப்பதற்குள் அதை இறக்கிய விமானம் பாதுகாப்பான தூரத்திற்கு சென்றுவிடும். இவை குறிப்பாக வானிலிருந்து போடப்படும் அணுஆயுதங்கள் மற்றும் விமானத்தின் குறைந்த உயரத்திலிருந்து குண்டுகள் ஏவப்படும் சூழ்நிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.[8]

கையெறி குண்டு வீசுவதன் மூலம் செலுத்தப்படுகின்றன. M203 அல்லது GP-30 வகை நீள் துப்பாக்கியின் முகப்புப்பகுதியிலிருந்து செலுத்துதல் அல்லது ராக்கெட்டில் இணைக்கப்பட்ட எறிகுண்டு (RPG) எனப்படும் ராக்கெட்டில் இணைக்கப்பட்ட வெடிக்கும் குண்டுகள் போன்ற எறிகுண்டு வீசுவான் மூலமும் எறிகுண்டுகள் வீசப்படுகின்றன.

ஒரு குண்டு, முன்னமே அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

இரயில் வருவதற்கு சற்று நேரம் முன்பு இரயில் பாதையை ஒரு குண்டு அழித்தால் இரயில் தடம்புரண்டு விடும். வண்டிக்கும் மக்களுக்கும் சேதம் ஏற்பட்டது நீங்கலாக, வெடி வெடித்ததால் போக்குவரத்து வலையமைப்பிலும் சேதம் ஏற்படும். மேலும் சில நேரங்களில் போக்குவரத்து வலையமைப்பில் சேதம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே வெடி வைக்கப்படும். இது போன்ற வெடிகள் ரயில் பாதைகள், பாலங்கள், ஓடுபாதைகள் மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் சூழ்நிலைகளைப் பொருத்து குறைவான அளவில் சாலைகளிலும் இவை செயல்படுத்தப்படுகின்றன.

மனித வெடிகுண்டைப் பயன்படுத்தும் போது வெடிகுண்டை ஒரு நபரின் உடலில் வைத்தோ அல்லது வாகனத்தில் வைத்து இலக்கை நோக்கி ஓட்டிவந்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது.

ப்ளூ பீகாக் அணுச் சுரங்கங்களும், போர் நேரத்தில் "வெடிகுண்டுகளாக" பயன்படுத்தும் நிலையில் உள்ளன. மேலும் அவை தொந்தரவு செய்யப்பட்டால் பத்து நொடிகளுக்குள் வெடித்துவிடும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.

வெடித்தூண்டி அல்லது மின் உருக்கியால் தூண்டப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்படும். கடிகாரங்கள், கைபேசிகள் போன்ற ரிமோட் கண்ட்ரோல்கள் அல்லது அழுத்தம் (உயரம்), ரேடார் , அதிர்வு அல்லது தொடர்பு போன்ற சில வகை உணர்கருவிகளால் வெடித்தூண்டிகள் தூண்டப்படுகின்றன. வெடிதூண்டிகள் அவை வேலை செய்யும் விதங்களில் வேறுபடுகின்றன. அவை மின்சாரத்தினால் செயல்படும்படியும், நெருப்பு மின் உருக்கி அல்லது வெடியினால் தொடங்கப்படும் வெடித்தூண்டிகள் மற்றும் வேறுவிதங்களில் செயல்படும்படியும் இருக்கலாம்.

வெடிப்பிடம்

தடய அறிவியலில், வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கிய இடத்தை அதன் வெடித்த இடம், வெடித் துளை அல்லது மையப்புள்ளி மூலம் குறிப்பிடுவார்கள். அதன் வகை, வெடிப்பொருட்களின் அளவு மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பொருத்து வெடிப்பிடத்தில் பரவலான அல்லது ஒருமுகப்படுத்தப்பட்டதாக (வெடிப்புப்பள்ளம்) இருக்கலாம்.[9]

பொதுவாக வெடிப்புப் பள்ளமானது வெடிபொருள் கருவியைக் கண்டுபிடிக்க ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது. தூசு அல்லது ஆவி வெடிப்புகள் போன்ற மற்ற வகை வெடித்தல்களில் வெடிப்புப்பள்ளம் ஏற்படுத்துவது அல்லது வரையறுத்த வெடிப்பிடங்கள் கூட இருக்காது.[9]

குறிப்புகள்

  1. 1.0 1.1 Milstein, Randall L. (2008). "Bomb damage assessment". In Ayn Embar-seddon, Allan D. Pass (eds.) (ed.). Forensic Science. Salem Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1587654237. {{cite book}}: |editor= has generic name (help)
  2. "The House in the Middle". Federal Civil Defense Administration. 1954. பார்க்கப்பட்ட நாள் 2008-07-16.
  3. Marks, Michael E. (2002). The Emergency Responder's Guide to Terrorism. Red Hat Publishing Co., Inc. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-932235-00-0.
  4. Wong, Henry (2002). "Blast-Resistant Building Design Technology Analysis of its Application to Modern Hotel Design". WGA Wong Gregerson Architects, Inc.. pp. 5. 
  5. Solovyov, Dmitry (2007-09-12). "Russia tests superstrength bomb, military says". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  6. Murphy, Justin (2005). Military Aircraft, Origins to 1918: An Illustrated History of their Impact. ABC-CLIO. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1851094881. பார்க்கப்பட்ட நாள் 2008-05-26. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  7. Lindqvist, Sven (2004). "Guernica". Shock and Awe: War on Words. published by Van Eekelen, Bregje. North Atlantic Books. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0971254605. பார்க்கப்பட்ட நாள் 2008-05-26.
  8. Jackson, S.B. (June 1968). The Retardation of Weapons for Low Altitude Bombing. United States Naval Institute Proceedings. 
  9. 9.0 9.1 Walsh, C. J. (2008). "Blast seat". In Ayn Embar-seddon, Allan D. Pass (eds.) (ed.). Forensic Science. Salem Press. p. 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1587654237. {{cite book}}: |editor= has generic name (help)

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வெடிகுண்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!