வாழப்பாடி கே. ராமமூர்த்தி (18 ஜனவரி 1940 - அக்டோபர் 27, 2002) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பெரும் தலைவர்களான ஜி. கே. மூப்பனார் தலைமையிலான "மூப்பனார் கோஷ்டி"க்கும் எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்ற ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது.
1991-1996 பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
1996 நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தலில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்பு 2001 சட்டமன்றத் தேர்தலில்திமுக–பாஜக கூட்டணியில் தொடர்ந்த போதும் தேர்தலில் போட்டியிட கேட்ட தொகுதிகள் திமுக தலைவர் மு.கருணாநிதி கொடுக்காததால் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் அத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பிறகு தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பிறகு 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.