லிச்சாவி (Licchavi) (Lichchhavi, Lichavi) நேபாளாத்தில் கி பி 400 முதல் 750 வரை காத்மாண்டு சமவெளியில் லிச்சாவி எனும் அரச மரபினரால் ஆளப்பட்டது. இவர்கள் ஆண்ட பகுதிக்கு லிச்சாவி நாடு என்பர். கௌதம புத்தர் காலத்திய லிச்சாவிகளின்மகாஜனபத குடியரசு நாட்டிற்கும், நேபாளத்தை ஆண்ட இந்த லிச்சாவி அரச குலத்தினருக்கும் உள்ள தொடர்பு அறியப்படவில்லை.
லிச்சாவியர்கள் தங்களது கல்வெட்டு குறிப்புகளை சமஸ்கிருத மொழியில் எழுதி வைத்திருந்தனர்.
லிச்சாவி எனும் சொல்லிற்கு சமஸ்கிருத மொழியில் நட்சத்திரம் எனப் பொருள். [1]
முதலில் காத்மாண்டு நகர சதுக்கத்தில், கி பி மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோயில்களை எழுப்பியவர் முதலாம் மானதேவன் எனும் லிச்சாவி குல மன்னர் ஆவார்.
சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரு பக்கத்தில் இலக்குமியின் உருவமும், மறுபுறத்தில் முதலாம் சந்திரகுப்தர்-குமாரதேவியின் உருவமும் பதியப்பட்டிருக்கும்.[2]பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண்களில், சமுத்திரகுப்தர் தன்னை லிச்சாவிகளின் பேரன் எனக் குறித்துள்ளார்.[3]
பதிவுகள்
நேபாள-இந்திய எல்லையில் பிகார் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருந்த லிச்சாவி இனக் குழுவினர், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், நேபாள நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிராதர்களை வென்று தங்கள் ஆட்சியை நிறுவினர்.
பௌத்த சமய நூல்களில், குறிப்பாக லிச்சாவி சுத்தத்தில் லிச்சாவிய இனக் குழுவினரை பல முறை குறித்துள்ளது.[4]
அன்மையில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகளின் படி லிச்சாவி மன்னன் முதலாம் மானதேவன் நிறுவிய லிச்சாவி நாட்டை கி பி 464 முதல் மூன்று லிச்சாவி அரச குலத்தவர்கள் ஆண்டதாக தெரிகிறது.