லா எசுப்பானியோலா அல்லது லா இஸ்பானியோலா அல்லது லா இச்பானியோலா ( La Española) என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் இலத்தீன் அமெரிக்க நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த(1492 & 1493), ஐரோப்பிய பயணி கொலம்பசு ஆவார்.[4][5] அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு எசுப்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு லா எசுப்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய எயிட்டி) பிரான்சியர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.