ரா. பி. சேதுப்பிள்ளை

இரா.பி. சேதுபிள்ளை
சொல்லின் செல்வர்
பிறப்புஇரா. பி. சேதுபிள்ளை
(1896-03-02)2 மார்ச்சு 1896
இராஜவல்லிபுரம்
இறப்பு25 ஏப்ரல் 1961(1961-04-25) (அகவை 65)
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், சட்ட இளவர்
பணிவழக்குரைஞர், பேராசிரியர்
பணியகம்சென்னைப் பல்கலைக் கழகம்
வாழ்க்கைத்
துணை
ஆழ்வார் சானகி
கையொப்பம்

இரா.பி. சேதுப்பிள்ளை (Ra . Pi . Sethu Pillai, 2 மார்ச்சு 1896 – 25 ஏப்ரல் 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

பிறப்பு

சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2-ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்குச் சேது என்று பெயர் சூட்டினர். இரா.பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.

கல்வி

ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர்த் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர்மீடியட்) இரண்டாண்டுகளைத் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்குத் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.

பணிகள்

சேதுப்பிள்ளை 1923-ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேது, நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டு தமிழ்த் துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது. சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணி புரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்தினார்.

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப் பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தொடர் சொற்பொழிவுகள்

பல்கலைக்கழகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த சேதுப்பிள்ளை, தமது செந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார். இவரின் மேடைப் பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின் அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும் அன்பான வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.

படைப்புகள்

இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களைப் பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புகளாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை. எனவே அவரது உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும் பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.

இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,

  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழின்பம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ் வீரம்
  • தமிழ் விருந்து
  • வேலும் வில்லும்
  • வேலின் வெற்றி
  • வழிவழி வள்ளுவர்
  • ஆற்றங்கரையினிலே
  • தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
  • செஞ்சொற் கவிக்கோவை
  • பாரதியார் இன்கவித்திரட்டு

போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.

சிறப்புகள்

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு 1955-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950-ஆம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961-இல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

உரைநடை நயங்கள்

இரா.பி. சேதுப்பிள்ளையின் உரை நடைகளில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு - அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?

“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடம்புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவை தரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்” [1] அன்பழகன் குறிப்பிடுகின்றார்.

"வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் உற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன." [2]

"அறம் மணக்கும் திருநகரே! சில காலத்திற்கு முன்னே பாண்டி நாட்டில் பருவமழை பெய்யாது ஒழிந்தது; பஞ்சம் வந்தது; பசிநோயும் மிகுந்தது; நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது; நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது அன்னக் கொடி கட்டினார் சீதக்காதி. 'கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன? என் களஞ்சிய நெல்லை அல்லா தந்த நெல்லை - எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் - இதுவன்றோ அறம்?" [3]

"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்."

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

  1. ஆற்றங்கரையினிலே (நூல்)
  2. கடற்கரையினிலே (நூல்)
  3. கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நூல்)
  4. தமிழ் விருந்து (நூல்)
  5. தமிழக ஊரும் பேரும் (நூல்)
  6. தமிழர் வீரம் (நூல்)
  7. தமிழின்பம் (நூல்)
  8. மேடைப் பேச்சு (நூல்)
  9. வேலின் வெற்றி (நூல்)

மேற்கோள்கள்

  1. ‘தமிழ்க் கடல் அலைஓசை பரவும் தமிழர் மாட்சி’ என்னும் தம் நூலில் பேரா. க. அன்பழகன்
  2. இரா.பி.சேதுப்பிள்ளை, 'ஊரும் பேரும்' என்னும் நூலில்'நாடும் நகரமும்' என்னும் தலைப்பிலான கட்டுரை
  3. இரா.பி சேதுப்பிள்ளை ‘உமறுப்புலவர்’ என்ற கட்டுரை

வெளி இணைப்புகள்

Read other articles:

Joshua OppenheimerJoshua Oppenheimer pada peluncuran film The Act of Killing di PrancisLahirJoshua Lincoln Oppenheimer23 September 1974 (umur 49)Texas, Amerika SerikatKebangsaanAmerika Serikat, InggrisPekerjaanSutradara Joshua Lincoln Oppenheimer (lahir 23 September 1974 di Texas, Amerika Serikat) adalah sutradara film berkebangsaan Amerika dan Inggris tinggal di Copenhagen, Denmark. Film karya Oppenheimer mengaburkan batas antara fiksi dan dokumenter. Dipengaruhi oleh montase eksperimen...

 

Oust-Kan (ru) Oust-Kan Le village en mai. Administration Pays Russie Région économique Sibérie de l'Ouest District fédéral Sibérien Sujet fédéral République de l'Altaï Raïon Oust-Kan Municipalité Oust-Kan Code postal 649450 Code OKATO 84235865001 Code GKGN 0013534 Code OKTMO 84635465101 Démographie Population 4 956 hab. (2023) Géographie Coordonnées 50° 55′ 39″ nord, 84° 45′ 40″ est Altitude 1 010 m Fuseau horaire UTC+...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (سبتمبر 2019) ألبرتشينا دو أوليفيرا كوستا معلومات شخصية اسم الولادة (بالبرتغالية البرازيلية: Albertina Gordo de Oliveira Costa)‏  الميلاد القرن 20  البرازيل  مواطنة البرازيل  ا

Folco LulliFolco Lulli pada 1954Lahir(1912-07-03)3 Juli 1912Firenze, ItaliaMeninggal23 Mei 1970(1970-05-23) (umur 57)Roma, ItaliaPekerjaanPemeranTahun aktif1946–1970 Folco Lulli (3 Juli 1912 – 23 Mei 1970) adalah seorang partisan[1] dan pemeran film Italia. Ia tampil dalam 104 film antara 1946 dan 1970. Ia adalah saudara dari pemeran Piero Lulli.[2] Filmografi pilihan How I Lost the War (1947) The White Primrose (1947) Flesh Will Surrender (1947) Tr...

 

Dalam Geometri, semiperimeter dari sebuah bangun poligon adalah setengah dari keliling. Umumnya semiperimeter muncul dalam rumus untuk segitiga dan bentuk lainnya dengan nama yang lain. Semiperimeter dinotasikan dengan huruf s. Segitiga Dalam segitiga, jarak antara sisi segitiga dan vertex menuju titik yang berlawanan dengan sudut yang berhadapan tersentuh dengan lingkar luar sama dengan semiperimeter. Pada semiperimeter umumnya untuk segitiga rumusnya adalah sebagai berikut dengan sisi segit...

 

Map of the Mountain Province showing its extent in 1918. The map shows borders of its sub-provinces. The sub-provinces of the Philippines were a political and administrative division of the Philippines. The sub-provinces were a part of a larger regular province and residents of a sub-province participated in provincial elections of the parent province. List of historical sub-provinces Sub-province Parent province Established Disestablished Fate Abra Ilocos Sur April 1, 1905 March 9, 1917 Alre...

Mogok kerja SAG-AFTRA 2023Bagian dari Sengketa pekerja Hollywood 2023Tanggal14 Juli 2023 – sekarang(4 bulan, 2 minggu dan 2 hari)LokasiAmerika Serikat, terutama Los Angeles dan Kota New York[a][1]Sebab Kurangnya kesepakatan tentang kontrak baru antara SAG-AFTRA dan AMPTP Ketidaksepakatan atas sisa pembayaran media penyiaran dan peraturan audisi rekaman sendiri Penggunaan kecerdasan buatan oleh studio untuk memindai wajah aktor untuk menghasilkan pertunjukan se...

 

ASF1A التراكيب المتوفرة بنك بيانات البروتينOrtholog search: PDBe RCSB قائمة رموز معرفات بنك بيانات البروتين 1TEY, 2I32, 2IIJ, 2IO5, 3AAD, 5C3I المعرفات الأسماء المستعارة ASF1A, CGI-98, CIA, HSPC146, anti-silencing function 1A histone chaperone معرفات خارجية الوراثة المندلية البشرية عبر الإنترنت 609189 MGI: MGI:1913653 HomoloGene: 8528 GeneCards: 25842 علم ا...

 

Escuela Cristóbal Colón de la Salle is a private school with three campuses in Gustavo A. Madero, Mexico City. It has one preschool campus and one elementary school campus in Col. Tepeyac Insurgentes, and a middle and high school campus in Col. Siete Maravillas.[1] References ^ Home page. Escuela Cristóbal Colón de la Salle. Retrieved on April 12, 2016. Preescolar Av. Misterios #25 Col. Tepeyac Insurgentes Del. Gustavo A. Madero C.P. 07020 Ciudad de México and Primaria Chulavista...

Cuban boxer Niño ValdésBornGeraldo Ramos Ponciano Valdés(1924-12-05)December 5, 1924Havana, CubaDiedJune 3, 2001(2001-06-03) (aged 76)New York City, USNationalityCubanStatisticsWeight(s)HeavyweightHeight1.91 m (6 ft 3 in)Reach198 cm (78 in)StanceOrthodox Boxing recordTotal fights70Wins48Wins by KO36Losses18Draws3No contests1 Niño Valdés (born Geraldo Ramos Ponciano Valdés, also known as Nino Valdés) (December 5, 1924 – June 3, 2001) was a Cuban professio...

 

Artikel ini sebatang kara, artinya tidak ada artikel lain yang memiliki pranala balik ke halaman ini.Bantulah menambah pranala ke artikel ini dari artikel yang berhubungan atau coba peralatan pencari pranala.Tag ini diberikan pada Maret 2023. Museum Nasional LvivНаціональний музей у Львові імені Андрея ШептицькогоDidirikan1905LokasiLvivPendiriAndrey SheptytskySitus webnml.com.ua/enMuseum Nasional Lviv Andrey Sheptytsky ( bahasa Ukraina: Нац...

 

Istanbul - Khayaban Esteghlal. Noms de Khayaban, Istanbul, Turquie Cette page présente une chronologie de l'histoire de la ville d'Istanbul, en Turquie. Avant le IVe siècle : Byzance 657 avant J.C. - Byzance (Byzantion) est fondée par les Grecs. 513 avant J.C. - Ville prise par les Perses de Darius le Grand[1]. 479 avant J.C. - Les Spartiates prennent le contrôle de Byzance aux Perses après leur victoire à la bataille de Platées. 411 avant J.C. - Prise par Sparte. 408 avant J...

1651 battle of the Khmelnytsky Uprising Battle of BerestechkoPart of the Khmelnytsky UprisingThe Battle of Berestechko between the Cossack Hetmanate and Crimean Khanate against the Polish–Lithuanian CommonwealthDate28 June — 10 July, 1651LocationBerestechko, Volhynian Voivodeship, Polish–Lithuanian CommonwealthResult Decisive Polish–Lithuanian victoryBelligerents Cossack Hetmanate Crimean Khanate Polish–Lithuanian CommonwealthCommanders and leaders Bohdan Khmelnytsky Tymofiy Khmelny...

 

High Kick Through the RoofPoster promoGenreKomedi situasiPemeranLee Soon-jaeKim Ja-okJeong Bo-seokOh Hyun-kyungChoi DanielHwang Jung-eumShin Se-kyungYoon Shi-yoonJin Ji-heeSeo Shin-aeLee Gi-kwangLagu pembukaHigh Kick Through the Roof oleh Hooni Hoon ft. Seo Ye-naLagu penutupYou Are My Girl! oleh Kim Cho-hanNegara asalKorea SelatanBahasa asliKoreaJmlh. episode126ProduksiProduserKim Byeong-ookDurasi30 menitRumah produksiChorokbaem MediaRilisJaringan asliMBC [HD]Rilis asli7 September 2009 ...

 

You can help expand this article with text translated from the corresponding article in Croatian. (March 2009) Click [show] for important translation instructions. View a machine-translated version of the Croatian article. Machine translation, like DeepL or Google Translate, is a useful starting point for translations, but translators must revise errors as necessary and confirm that the translation is accurate, rather than simply copy-pasting machine-translated text into the English Wiki...

Ministry of the government of Argentina Ministry of DefenseMinisterio de DefensaLibertador Building, headquarters of the MinistryMinistry overviewFormed1854; 169 years ago (1854)Preceding MinistryMinistry of War (Argentine Confederation; first creation)JurisdictionGovernment of ArgentinaHeadquartersLibertador Building, Azopardo 250, Buenos AiresAnnual budget$ 246,143,974,961 (2021)[1]Minister responsibleJorge TaianaWebsiteargentina.gob.ar/defensa Politics of Argentin...

 

Television comedy sketches Tina Fey as Sarah Palin (left) and Amy Poehler as Hillary Clinton (right) in their first sketch, A Nonpartisan Message from Governor Sarah Palin & Senator Hillary Clinton The sketch comedy television show Saturday Night Live aired several critically acclaimed sketches parodying then Alaskan Governor and vice-presidential nominee Sarah Palin in the lead-up to the 2008 United States presidential election. The sketches featured former cast member Tina Fey, who retu...

 

German politician (1930–2014) Ernst AlbrechtAlbrecht in 1988Minister-President of Lower SaxonyIn office6 February 1976 – 21 June 1990DeputyWilfried HasselmannRötger GroßWilfried HasselmannJosef StockPreceded byAlfred KubelSucceeded byGerhard SchröderPresident of the BundesratIn office1 November 1985 – 31 October 1986First Vice PresidentLothar SpäthPreceded byLothar SpäthSucceeded byHolger BörnerDirector-General of the Directorate-General for CompetitionIn office1...

Parângu Mare (2519 m) Pegunungan Parâng adalah bagian dari Pegunungan Carpathians di bagian selat. Nama pegunungan ini diambil dari gunung Gunung Parâng yang merupakan gunung terbesar dalam rangkaianya. Perbatasan Pegunungan Parâng berbatsan dengan: di timur, dengan Sunai Olt di barat, dengan Sungai Jiu Gunung Gunung Parâng (Munţii Parâng) Gunung Şureanu (Munţii Şureanu/M. Sebeşului) Gunung Cindrel (Munţii Cindrel/M. Cibinului) Gunung Lotru (Munţii Lotrului) Gunung Căpăţână ...

 

Sausage PartyTheatrical release posterSutradara Conrad Vernon * Greg Tiernan Produser Megan Ellison * Seth Rogen * Evan Goldberg * Conrad Vernon Ditulis oleh Kyle Hunter * Ariel Shaffir * Seth Rogen * Evan Goldberg Skenario Kyle Hunter * Ariel Shaffir * Seth Rogen * Evan Goldberg Cerita Seth Rogen * Evan Goldberg * Jonah Hill Pemeran Michael Cera * James Franco * Salma Hayek * Jonah Hill * Danny McBride * Edward Norton * Seth Rogen * Paul Rudd * Kristen Wiig Penata musik Alan Menken * C...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!