யெல்ன்யா தாக்குதல்

யெல்ன்யா தாக்குதல்
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி
நாள் ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 8, 1941
இடம் யெல்ன்யா, சோவியத் ஒன்றியம்
54°34′N 33°10′E / 54.567°N 33.167°E / 54.567; 33.167
கீழ்நிலை உத்தியளவில் சோவியத் வெற்றி
பிரிவினர்
நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
ஃபடோர் வான் பாக் கிரகோரி சூக்கோவ்
பலம்
தெரியவில்லை 103,200[1]
இழப்புகள்
தெரியவில்லை 10,701 - மாண்டவர் / காணாமல் போனவர்
21,152 - காயமடைந்தவர்
31,853 - மொத்தம்[1]

யெல்னயா தாக்குதல் (Yelnya Offensive) 1941 இல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். இதில் சோவியத் படைகள் வெற்றி பெற்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி முடிவடைந்திருந்த ஸ்மோலென்ஸ்க் சண்டையில் ஜெர்மானியப் படைகள் யெல்னயா நகரைக் கைப்பற்றி அதனைச் சுற்றி ஒரு வீக்கப்பகுதியை (salient) உருவாக்கியிருந்தன. அதனைத் தளமாகப் பயன்படுத்தி மாஸ்கோ நகரைத் தாக்கத் திட்டமிட்டிருந்தன. இதனை முறியடிக்க ஆகஸ்ட் 30ம் தேதி மார்ஷல் கிரகோரி சூக்கோவ் தலைமையிலான சோவியத் 24வது ஆர்மி யெல்னயா வீக்கப்பகுதியைத் தாக்கியது. செப்டம்பர் 3ம் தேதி யெல்னயாவிலிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் பின்வாங்கத் தொடங்கின. செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர்ந்து முன்னேறிய சோவியத் படைகள் யெல்னயா வீக்கப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றின. பர்பரோசா நடவடிக்கையில் ஜெர்மானியப் படைகளுக்கு எதிராக சோவியத் படைகளுக்குக் கிட்டிய முதல் பெருவெற்றியாக இத்தாக்குதல் அமைந்தது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 Glantz (1995), p. 293

மேற்கோள்கள்

  • Glantz, David M. & House, Jonathan (1995), When Titans Clashed: How the Red Army Stopped Hitler, Lawrence, Kansas: University Press of Kansas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7006-0899-0
  • Kurowski, Franz, Translated by David Johnston, Panzer Aces II: Battle Stories of German Tank Commanders in World War II, Stackpole Books, 2004
  • Newton, Steven H., Hitler's Commander: Field Marshal Walther Model--Hitler's Favorite General, Da Capo Press, 2005
  • Khoroshilov, G. (Col.), Bazhenov, A., (Maj.), Yelnya Offensive Operation of 1941, Military-historical Journal, No.9, 1974, (உருசியம்: Полковник Г. Хорошилов, майор А. Баженов, Ельнинская наступательная операция 1941 года, Военно-исторический журнал" № 9, 1974 г)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!