பிரெஸ்ட் சண்டை
|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி
|
பிரெஸ் சண்டையின் போது கிழக்குப் போர்முனை களநிலவரம்
|
நாள் |
22–30 ஜூன், 1941
|
இடம் |
பிரெஸ்ட், பெலாருஸ், சோவியத் ஒன்றியம்
|
|
ஜெர்மானிய வெற்றி
|
|
பிரிவினர் |
ஜெர்மனி
| சோவியத் ஒன்றியம்
|
தளபதிகள், தலைவர்கள் |
ஃபிரிட்ஸ் ஷ்லீப்பெர்
| பியோட்டர் காவ்ரிலோவ் இவான் சுபாச்சியோவ் யெஃபிம் ஃபோமின் (23 ஜூன்-30)[1]
|
பலம் |
17,000-20,000[2]
| 3,000[2]-7,000-8,000[3]
|
இழப்புகள் |
மாண்டவர்: 414 [3]
| போர்க்கைதிகள்: 400 [3] மொத்தம்: 7,000 வரை
|
பிரெஸ்ட் கோட்டையின் பாதுகாப்பு (Defense of Brest Fortress) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஜூன் 22-30, 1941 காலகட்டத்தில் நடைபெற்ற இது பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும். இம்மோதலில் தற்போது பெலாருசில் உள்ள பிரெஸ்ட் கோட்டையை நாசி ஜெர்மனியின் படைகள் தாக்கிக் கைப்பற்றின. கோட்டையின் சோவியத் பாதுகாவல் படைகள், பல நாட்கள் ஜெர்மானியத் தாக்குதல்களை சமாளித்தது, இரண்டாம் உலகப் போரின் சோவியத் விடாஎதிர்ப்பின் சின்னமாக உருப்பெற்றது.
ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. பெலாருசின் பிரெஸ்ட் நகரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போர், வார்சா-மாஸ்கோ தொடருந்துப் பாதைகள், நெடுஞ்சாலைகள், பக் ஆற்றினை கடக்கும் வழிகள் ஆகியவறைக் கட்டுப்படுத்தும் நிலை இருந்தது. இதனால் அந்நகரையும் அதன் முக்கிய அரண் நிலையான பிரெஸ்ட் கோட்டையினையும் சோவியத் படைகளிடமிருந்து கைப்பற்ற ஜெர்மானிய ஆர்மி குருப் ”நடு” முயன்றது. சுமார் 9,000 சோவியத் வீரர்கள் அக்கோட்டையைப் பாதுகாத்து வந்தனர்.
ஜூன் 22 அன்று பிரெஸ்ட் கோட்டை ஜெர்மானியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகை தொடங்கியது. தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் கோட்டையைக் கைப்பற்ற முயன்றன. எதிர்பாராத ஜெர்மானியத் தாக்குதலால் நிலை குலைந்திருந்த சோவியத் பாதுகாவல் படைகள் விரைவில் சுதாரித்து கடுமையான எதிர்த்தாக்குதல் தொடுத்தன. அடுத்த சில நாட்களுக்குக் கோட்டையைக் கைப்பற்ற கடும் சண்டை நடந்தது. ஜெர்மானியர்கள் எதிர்பார்த்தது போலக் கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. கடும் மோதல்களுக்குப் பின்னர் மெதுவாக ஒவ்வொரு அரண்நிலையாக ஜெர்மானியர்கள் கைப்பற்றினர். ஜூன் 30ம் தேதி கோட்டை முழுவதும் ஜெர்மானியர் வசமானது. இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சோவியத் பரப்புரைக்கு இது வெகுவாக உதவியது. எளிதில் வீழ்ந்துவிடும் என்று ஜெர்மானியர் எண்ணிய பிரெஸ்ட் கோட்டை பல நாட்கள் தாக்குப்பிடித்தது 1950களில் பரவலாகத் தெரிய வந்தது. 1965 இல் சோவியத் அரசு இக்கோட்டைக்கு “நாயகர் கோட்டை” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. இம்மோதலை நினைவு கூறும் வகைஇல் பிரெஸ்ட் கோட்டையில் ஒரு அருங்காட்சியகமும் தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ Constantine Pleshakov, Stalin's Folly: The Tragic First Ten Days of World War II on the Eastern Front, Houghton Mifflin Books, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0618367012, Google Print, p.243
- ↑ 2.0 2.1 Geoffrey Roberts, Stalin's Wars: From World War to Cold War, 1939-1953
, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300112041, Yale University Press, 2006, Google Print, p.87
- ↑ 3.0 3.1 3.2 Robert Kirchubel, Operation Barbarossa 1941 (3): Army Group Center, Osprey Publishing, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1846031079, Google Print, p.44