முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 20 கி.மீ.; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
முத்தூர் பேரூராட்சி, 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]