இச்சமன்பாடுகள் இரு முதன்மை வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுகின்றன; "நுண்ணோக்கிய" மாக்சுவெல்லின் சமன்பாடுகள் தொகுப்பில், பொருட்களின் அணுப் பரிமானத்தில் இருக்கும் சிக்கலான மின்மங்களையும் மின்னோட்டங்களையும் உள்ளிட்ட, மொத்த மின்மம் மற்றும் மொத்த மின்னோட்டத்தைப் பயன்படுத்துகின்றன. இவை எவ்விடத்தும் எப்பொருளிலும் பயன்படுத்தத்தக்கன; ஆனால் கணக்கிடுவதற்கு இயலாமல் இருக்கலாம். "பேரியலான" மாக்சுவெல்லின் சமன்பாடுகள் தொகுப்பில் அணுப் பரிமானத்து விவரங்களை ஒதுக்கி பேரியலான நடத்தையை விவரிக்கும் இரு புதிய துணைப் புலங்கள் வரையறுக்கப்படுகின்றன; இவற்றிற்கு தொடர்புள்ள பொருட்களின் மின்காந்த பண்புகளை விரித்துரைக்கும் கூறளவுகள் தேவைப்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இவை அண்டத்தின் விதிகளை மிகச்சரியாக விவரிக்க இயலாதவை என்பது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சரியாக விவரிக்கும் குவாண்டம் மின்னியக்கவியல் அடிப்படைக் கொள்கைகளின் மரபார்ந்த தோராயமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இத்தோராயம் அளக்கவியலா அளவில் மிகவும் சிறியதாகும். ஒளியின் துகள் பண்பு வெளிப்படும்போதும் மிக வலிய மின்புலங்களை எதிர்நோக்கும்போதுமே விலக்குகள் நேர்கின்றன.
மரபார்ந்த வடிவத்தில் மாக்சுவெல்லின் சமன்பாடுகள்
மாக்சுவெல்லின் முதல் சமன்பாடு ஒரு மின்மத்தினால் உருவாக்கப்படும் மின்புலத்தை கணக்கிட உதவுகிறது. இரண்டாம் சமன்பாடு காந்தப் புலத்தை கணக்கிட உதவுகிறது. அடுத்த இரு சமன்பாடுகளும் எவ்வாறு இந்தப் புலங்கள் தங்கள் மூலங்களைச் 'சுற்றியோடு'கின்றன என்பதை விவரிக்கின்றன. காந்தப்புலங்கள் மின்னோட்டங்களையும் நேரத்தில் மாறும் மின்புலங்களையும் மாக்சுவெல் திருத்தமேற்கொண்ட ஆம்பியர் விதிப்படி சுற்றியோடுகின்றன; மின்புலங்கள் நேரத்தில் மாறும் காந்தப் புலங்களை பரடேயின் விதிப்படி சுற்றியோடுகின்றன.
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், "A Dynamical Theory of the Electromagnetic Field", Philosophical Transactions of the Royal Society of London155, 459–512 (1865). (இக்கட்டுரை திசம்பர் 8, 1864 அன்று மக்சுவெல்லால் அரச சமூகத்திற்கு வழங்கிய விளக்கவுரையுடன் கொடுக்கப்பட்டது.)
சார்பு கோட்பாட்டிற்கு முந்தைய நிகழ்வுகள்
Joseph Larmor (1897) "On a dynamical theory of the electric and luminiferous medium", Phil. Trans. Roy. Soc.190, 205–300 (third and last in a series of papers with the same name).
என்ட்ரிக் லொரன்சு (1899) "Simplified theory of electrical and optical phenomena in moving systems", Proc. Acad. Science Amsterdam, I, 427–43.
என்ட்ரிக் லொரன்சு (1904) "Electromagnetic phenomena in a system moving with any velocity less than that of light", Proc. Acad. Science Amsterdam, IV, 669–78.
Henri Poincaré (1900) "La theorie de Lorentz et la Principe de Reaction", Archives Néerlandaises, V, 253–78.
Reitz, John R.; Milford, Frederick J.; Christy, Robert W. (2008). Foundations of Electromagnetic Theory (4th ed.). Addison Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-321-58174-7.
Maxwell, James Clerk, "A Dynamical Theory of the Electromagnetic Field", Philosophical Transactions of the Royal Society of London 155, 459–512 (1865). (This article accompanied a December 8, 1864 presentation by Maxwell to the Royal Society.)