மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.
கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையை சட்டத்தின் மூலமாக அங்கீகாரம் செய்துள்ளன. சில நாடுகளில் தற்போது மரணதண்டனைக்கு மாற்று தண்டனைகள் குறித்தான ஆய்வுகள் நடக்கின்றன. இவ்வாறு மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகள் வேறுவேறு முறைகளில் மரணதண்டனையை கையாளுகின்றன. அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் 70 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு பெண்ணுக்கு அவளின் கணவனைக் கொன்ற குற்றத்திற்காக விச ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.[1]
ஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து உடைய நாடுகளுமான 195 நாடுகள் கீழ்வரும் கொள்கையை பின்பற்றுகின்றன:
உலகின் 90% நாடுகள் சர்வதேச மன்னிப்பு சபைப்படி, இயங்குகின்றன.
100 (51%) நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டுமென விரும்புகின்றன.
7 (4%) நாடுகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (அதாவது போர் நேரம் போன்ற) குற்றங்களை தடுக்க மரணதண்டனையை விரும்புகின்றன.
48 (25%) நாடுகள் சாதாரண குற்றங்களுக்காக மரணதண்டனை பயன்பாட்டை அனுமதிக்கின்றன.
40 (20%) நாடுகளின் சட்ட நடைமுறையில் இரண்டு மரண தண்டனைகளைப் பராமரிக்கின்றன.
கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன. 2012 வரை போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை சட்டப்படி நிறைவேற்றிய நாடுகளின் பட்டியல்:
உலகின் முக்கியமான சமயங்கள் அனைத்தும் மரணதண்டனையைப் பற்றிய பல்வேறு கலவையான கருத்துகளை கொண்டுள்ளதாக உள்ளன. சமய கோட்பாடுகள், காலம் ஆகியவை மரண தண்டனை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மரணதண்டனையை அனுமதிப்பது, தடை செய்வது என இரு போதனைகளை இந்து மதம் கொண்டுள்ளது. இந்து சமயத்தின் புராணங்களிலும், சமயக் கதைகளிலும் மனித குலத்திற்கு தீமையை விளைவிக்கும் அரக்கர்கள் தெய்வங்களால் கொல்லப்படுதல் சொல்லப்படுகிறது. குற்றத்திற்கான தண்டனையை இறைவனே கொடுப்பார் என்பதை திருமாலின் தசவாதரங்களின் நோக்கம் விளக்குகிறது. இந்து மத தத்துவத்தின் படி ஆன்மா அழிவற்றது. உயிரானது இறந்த பிறகு, அவை உடலினை விட்டு பிரிந்து தனது நற்செயல்கள், தீசெயல்களைப் பொறுத்து சொர்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வதாக கருதப்பெறுகிறது. மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்களின் ஆன்மா நரகத்தில் அடையும் துன்பங்களைப் பட்டியலிடுகிறது.
இசுலாம்
இசுலாமிய சட்டத்தின் சில வடிவங்கள், மரண தண்டனையை வரவேற்கின்றன. ஆயினும் குரானில் கூறப்பட்டுள்ள உண்மையான மரண தண்டனையை இசுலாமிய சட்டத்தினை அடிப்படையில் சில நாடுகள் பின்பற்றுகின்றன. மரண தண்டனைக்கு பதிலாக மற்றொரு முறை பயன்படுத்த குரான் வழிகாட்டுகிறது. கொலை குற்றம் சிவில் குற்றமாக கருதப்பட வேண்டும். குற்றவாளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்வது என்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் அதிகாரமும் வழங்கப்பெறும். இதனை வலியுருத்தும் குரானின் வரிகள் கீழே:
பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள்.
அல்குரான். 2: 178,179.
சங்கை மிக்க அல் குர்ஆன் வசனம் ஒரு தனி மனிதனுக்கு இஸ்லாம் வழங்கும் மதிப்பையும் மரியாதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
‘‘எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.’’ (4:93)
மனித உயிருக்கு உரிய மதிப்பை வழங்கிய இஸ்லாம் கடந்த கால பனூ இஸ்ரேல் சமூகத்திற்கு விதித்த சட்டங்களில் ஒன்றை இந்த சமூகத்திற்கும் விதியாக்கியது. அல் குர்ஆன் அதனை பின்வருமாறு குறிப்பிடுகின்றது, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்.’’ (5:32)
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதி-லிருந்து அவனைத் தடுக்க வேண்டும். 2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும். 3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.
அதாவது உலக நாடுகள் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
''நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப் பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (நஷ்ட ஈடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.''
அல்குர்ஆன் 2:178, 179
''உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.''
அல்குர்ஆன் 5:45
''அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்! அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்''
அல்குர்ஆன் 17:33
தவறுதலாகக் கொலை செய்தல்
நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு நஷ்ட ஈடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
மரணதண்டனை எதிர்ப்பு
உலக நாடுகள் பலவற்றிலும் நடைமுறையில் உள்ள தூக்கிலிடுதல் போன்ற மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படியில் மனிதஉரிமையாளர்களால் மரணதண்டனை எதிர்ப்பானது செய்யப்பெறுகிறது. தவறுகளுக்காக தரப்படும் மரணதண்டனைகள் சரியானது அல்ல என்றும், தீர்வாகாது என்றும் இத்தகைய எதிர்ப்பாளர்கள் நம்புகிறார்கள். தேச பாதுகாப்பு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரணதண்டனையைத் தவிர மற்ற தண்டனைகளை அளிக்க இவர்கள் வற்புறுத்துகிறார்கள். மனித உயிர்கள் மகத்தானவை என்றும், கொலைக்கு மற்றொரு கொலை(மரணதண்டனை) கூடாதென்றும் கூறும் இவர்களில் இறைவன் கொடுத்த உயிரை பறிக்க மனிதர்களுக்கு உரிமையில்லை என்ற கருத்தினை உடைய ஆன்மிகவாதிகளும் உள்ளனர். மரணதண்டனை எதிர்க்க இயக்கங்கள் தொடங்கி, மாநாடுகளும், பிரச்சாரங்களும் நடைபெறுகின்றன.[7] மரணதண்டனைக்கு எதிரான வாதங்களாக முன்வைக்கப்படும் சில[8]
சமூகப் பொறுப்பு - ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது.
மனித நேயம் - ஆயுதமற்ற தனிமனிதனை அரசே படுகொலை செய்வது, ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.