புர்ஹான்பூர் |
---|
நகரம் |
தபதி ஆற்றங்கரையிலுள்ள ஷாகி கிலா |
புர்ஹான்பூர் (Burhanpur) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புர்ஹான்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் தப்தி ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. போபால் நகரிலிருந்து 340 கிலோமீட்டர்கள் தென்மேற்குத் திசையிலும், மும்பை நகரிலிருந்து 540 கிலோமீட்டர்கள் வடகிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இந்நகரானது ஒரு நகராட்சியாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,94,227 மக்கள் வசிக்கின்றனர்.[1] ஆண்கள் 51 % பேரும், பெண்கள் 49 % பேரும் ஆகும். இந்நகரின் கல்வியறிவு 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 % விட அதிகமாகும். இதில் ஆண்களில் 69 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 57 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் 15 % பேர் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். இந்நகரில் 48 % மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். 48 % மக்கள் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். பிற 4% மக்கள் சமணம், சீக்கியம் மற்றும் கிறுத்துவ சமயங்களைச் சார்ந்தவர்கள்.
மேற்கோள்கள்
இதையும் பார்க்கவும்