பாகையா (Bahia) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. இதன் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் சவ்வாதோர் விளங்குகிறது. சாவோ பாவுலோ, மினாஸ் ஜெரைசு, இரியோ டி செனீரோ மாநிலங்களை அடுத்து ஐந்தாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. "பாகையா" என்ற பெயர் "வளைகுடா" என்ற பொருளுடைய பாயியா என்ற போர்த்துகேய சொல்லிருந்து வந்துள்ளது.
உசாத்துணைகள்
அனாடெலியா ஏ. ரோமோ. Brazil's Living Museum: Race, Reform, and Tradition in Bahia (வட கரோலினாப் பல்கலைக்கழக அச்சகம்; 2010) 221 பக்கங்கள்; ஆபிரிக்க-பிரேசிலிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலமான பாகையாவின் அடையாள மாற்றத்தை அலசுகிறது; அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1888 முதல் 1964இன் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலம் வரையுள்ள வரலாற்றைப் பதிவு செய்கிறது.