தினத்தந்தி (Dina Thanthi) தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது 1942 ஆம் ஆண்டு நவம்பர் 1 சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முழுவதும் 16 பதிப்புகளும், சர்வதேச அளவில் துபாய், கொழும்பு ஆகிய இரு பதிப்புகளும் கொண்டு உள்ளது. [1].
ஆண்டின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் தினத்தந்தி 'பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை' புத்தகத்தை வெளியிடுகிறது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.
பள்ளிப்பகல் உணவுத் திட்டம், சீருடைத்திட்டம், பள்ளிச்சீரமைப்புத் திட்டம் முதலான பல கல்வித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து தந்த நாளிதழ்களில் முதலிடம் பெற்ற நாளிதழாக தினத்தந்தியைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு.[3]
மாணவர் ஸ்பெஷல்
தி.மு.க சார்பில் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் போட்டியிட்டதில் இருந்து 1976 இல் தி.மு.க அரசு நீக்கப்படும் வரை தி.மு.க சார்பு நாளிதழாகவும் பின்னர் ஓரளவு நடுநிலை நாளிதழாகவும் மாறியது.[4]