1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
முந்தைய திமுக ஆட்சியில் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்ற மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆன காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும், சமூக நீதி சார்ந்த பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது
இலங்கைக்கு ஈழதமிழற்களுக்கு இடையூறாக இருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெறப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர் அவர்களுக்கு மேரினா கடற்கரையில் முழுமையான பராமரிப்பற்றிருந்த அவரது சமாதிக்கு எதிர்கட்சி தலைவர் என்றும் பாராமல் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் பெரும் சீரமைப்பு செய்யப்பட்டு அழகான பளிங்கி கற்களால் வெளிநாட்டு தொழில்நுட்ப பொறியாளர்களை வைத்து அழகு செய்தார்.
பின்பு அவரது சமாதிக்கு முன்பகுதியில் எம்ஜிஆருக்கு ஒரு சிலை வைத்தார்.
அவரது நினைவாக எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யா போக்குவரத்து பேருந்து கழகம் என்ற பெயரில் அரசு பேருந்துகள் மு. கருணாநிதி அவர்களால் இயக்கபட்டது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த பெண்களுக்கு சொத்துரிமை இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக கையாண்டு இருந்தார்.
மத்தியில் மண்டல் கமிஷன் பரிந்துரையை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மு. கருணாநிதி அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பரிமலை கள்ளர், வன்னியர் உட்பிரிவினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கினார்.
அதே போல் அப்போது இலங்கை போர்கால இடையூறுகளை காரணம் காட்டி தமிழகம் வந்த ஈழத்தமிழ்ற்களை சிங்கள வெள்ளாளர் என்ற இனப்பெயருடன் அவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கபட்டு இட ஒதுக்கீட்டிலும் முன்னுரிமை வழங்கினார்.
விவசாயிகளுக்கு மோட்டார் ஒரு மின்விளக்கு பொருத்தப்பட்டு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் சந்திரசேகரின் ஆட்சியின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டது என்று காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுகவும் மற்றும் அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர்.
இதனால் ஜனவரி 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனபடுத்தபட்டு சூன் 1991ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழக ஆளுநர் ஒப்புதல் இல்லாமல். ஆட்சி கலைப்பு சட்டம் 356ல் அதர்வைஸ் முதல் முறையாக பயன்படுத்தி குடியரசு தலைவரே நேரடியாக ஆட்சியை கலைத்தார்.[3][4][5][6][7][8][9]
ஆனால் ஒரு பக்கம் இலங்கை தனிநாடு பிரிவினையை ஏற்காத சிங்கள அரசாங்கமும், ராஜீவ் காந்தி மீண்டும் இந்திய பிரதமர் ஆகினால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு பிரிவினை ஏற்படும் என்ற பகை உணர்வால் தற்கொலை படையை சிங்கள அரசாங்கமே ஏவி கொன்றது என கூறப்படுகிறது.
இதனால் தனது ஆட்சியை கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சி நிரல்களை மத்திய அரசாங்கத்தின் ரகசியங்களை உளவு செய்து விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று காரணம் காட்டப்பட்டது. இதனால் கருணாநிதியின் மீது தவறான காரணங்கள் பரவலாக மக்களிடையே காணபட்டதால் திமுக மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு (சோஷ்யலிஸ்ட்) கட்சி வேட்பாளர் சஞ்சய் ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.[10][11]
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 24 சூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.[10]
↑Subramanian, T. S. (14 August 1999). "SRI LANKA: Chronicle of murders". Frontline. The Hindu Group. Archived from the original on 9 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)