ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா (Joseph Chelladurai Cornelius Kumarappa; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர்.[1] தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழரான இவர், பட்டயக் கணக்கராக விளங்கினார்.
பின்னர் நிர்வாக மேலாண்மை, பொருளியல் ஆகிய துறைகளிலும் தகைமைகள் பெற்றார். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்றிய குமரப்பா, காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகமான குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் இருந்தார்.
காந்தியின் "யங் இந்தியா" பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலும் இவர் பணிபுரிந்துள்ளார். ஜே.சி.குமரப்பா தனது ஓய்வுக் காலத்தில் மதுரை மாவட்டத்தின் தே.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். குமரப்பா காந்திநிகேதன் ஆசிரமத்தை 1956-இல் சட்டபூர்வமாக பதிவு செய்து, அதன் முதல் தலைவரானார். குமரப்பா 1960-இல் மறைந்தார்.
ஜே. சி. குமரப்பாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 4 சனவரி 1967 அன்று காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குமரப்பா கிராமிய தன்னாட்சி நிறுவனம் துவக்கப்பட்டது.[2] இந்நிறுவனத்தில் மகளிர் மற்றும் இளையோருக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது படைப்புகள்
- நிலைத்த பொருளாதாரம் [தன்னறம்]
- தாய்மைப் பொருளாதாரம்
- இரும்புத் திரைக்குப் பின்னால் ரஷ்யா
- டிராக்டர் சாணி போடுமா? (ஜே.சி.குமரப்பா பற்றிய கட்டுரைத் தொகுப்பு) - தன்னறம் வெளியீடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
மக்கள் | |
---|
மற்றவை | |
---|