சோகி, சோவி அல்லது சோழி (Cowry) சிப்பிராய்டே குடும்ப பெருங்கடல்குடற்காலிமெல்லுடலிகளின் சிறியது முதல் பெரியது வரையிலான கடல் நத்தைகளின் பொதுப் பெயராகும். இது கௌரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இது பலகறை என அழைக்கப்படுகிறது. பொதுவாக இவ்வகை நத்தைகளின் ஓட்டைக் குறிக்க மாத்திரம் சோகி எனும் சொல் புழக்கத்தில் உள்ளது. இவற்றின் ஓடு கிட்டத்தட்ட முட்டை வடிவில் அமைந்திருக்கும். ஆனாலும் அடிப்பாகம் தட்டையாக இருக்கும்.
பாவனை
சாதகம் கணிக்க, பல்லாங்குழி, தாயக் கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.[1]
சோகி ஓடுகள் பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவில் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது. 1500 ஆம் ஆண்டுகளுக்குப் பின் இது பொதுவாக வந்தது. மேற்குலக நாடுகள் அடிமை வர்த்தகத்திற்கு பெரியளவு மாலைத்தீவுகள் சோகியை ஆப்பிரிக்காவில் பயன்படுத்தின.[2] சித்த மருத்துவத்ததில் பற்பம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.