செவீயா பெருங்கோவில் (Seville Cathedral/Cathedral of Saint Mary of the See; எசுப்பானியம்: Catedral de Santa María de la Sede) என்பது எசுப்பானியாவின் செவீயா எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இது உலகில் கோதிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேவாலயமாகும். மேலும் இது உலகின் மூன்றாவது பெரிய கிறித்தவ ஆலயமும் ஆகும். 1987 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் இப்பேராலயம் உலக பாரம்பரியக் களமாக பதிவு செய்யப்பட்டது.[1]
இப்பேராலயம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஹேகியா சோபியா மசூதியாக மாற்றம் பெற்ற பின்னர், இப்பேராலயமே உலகின் மிகப்பரிய பேராலயமாகத் திகழ்ந்தது. இங்கு கிறிஸ்தோபர் கொலம்பஸின் கல்லறை உள்ளது.[2] இப்பேராலயத்தின் வடகிழக்குப்பகுதியில் பேராயர் அரண்மனை அமைந்துள்ளது.
கல்லறைகள்
மூலங்கள்
- John Harvey, The Cathedrals of Spain
- Luis Martinez Montiel, The Cathedral of Seville
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
படத்தொகுப்பு