சித்தி (யோகம்)

இந்திய சோதிடத்தில் சித்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினாறாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 200° 00' தொடக்கம் 213° 20' வரை "சித்தி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "சித்தி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "சித்தி" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் சித்தி (Siddhi) என்பது சாதனை, நிறைவு, வெற்றி போன்ற பொருள்கள் அமைந்தது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் செவ்வாய். ஆட்சித் தேவதை கணேசன்.[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!