Share to: share facebook share twitter share wa share telegram print page

சாண்

எண் 4 காட்டும் அளவு ஒரு சாண்.

சாண் என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்கு பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. சாண் ஒரு முழத்தில் சரி பாதி. உலக அளவை முறையில் ஒன்பது அங்குலம் ஆகும். தனிப்பட்ட அளவு கருவிகளைச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை.

ஐந்து விரல்களையும் ஒரு சமதளத்தின் மீது விரித்தநிலையில் வைத்தால் கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து சுண்டுவிரலின் மேல் நுனிவரையுள்ள அளவு ஒரு சாண் எனப்படும். ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

12 விரற்கடை = 1 சாண்
2 சாண் = 1 முழம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Edwin Pliny Seaver (1895). New Franklin arithmetic: Second book. Butler, Sheldon & co. p. 384. Retrieved 27 January 2012.
  2. Daniel O'Sullivan (1872). The principles of arithmetic. Thom. p. 69. Retrieved 27 January 2012.
  3. σπιθαμή, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya