சமயச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும்.[1]
பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.[2][3] அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும்.
மேற்கோள்கள்
↑Universal Declaration of Human Rights, Article 18.