கோ. ஹரி (G.Hari), தமிழக அரசியல்வாதி. இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பெற்றோர் கோவிந்தசாமி, சின்னம்மாள் ஆவர். இவர் 1960ஆம் ஆண்டின் ஜூலை இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குப்பம்கண்டிகை என்ற ஊரில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.[1]
மேற்கோள்கள்