கூலி என்பது, ஓர் ஊழியரின் உழைப்புக்கு ஈடாக வேலைகொள்வோர் வழங்கும் பண ஈடு அல்லது ஊதியம் ஆகும். ஊதியம், ஒரு குறித்த வேலையைச் செய்து முடிப்பதற்கான ஒரு நிலையான பணத்தொகை என்ற அடிப்படையில் அல்லது ஒரு குறித்த கால அளவுக்கு (ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம் போன்றன) இவ்வளவு பணம் என்ற வகையில் அல்லது அளவிடத்தக்க ஒரு வேலையளவுக்கு இவ்வளவு பணம் என்றவாறு கணக்கிடப்படுகின்றது. ஒரு வணிகத்தை நடத்துவதில் ஏற்படும் செலவு வகைகளில் கூலியும் ஒன்று.
கூலி, சம்பளம் என்பதிலும் வேறானது. சம்பளம் என்பது கிழமை அல்லது மாதம் போன்ற குறித்த கால இடைவெளியில் ஊழியர் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார் என்று கணக்கிடாமல், வேலைகொள்வோர் ஊழியருக்கு வழங்கும் தொகையைக் குறிக்கும். கூலிக்குப் புறம்பாக, கூலித் தொழிலாளர்களுக்கு வேலைகொள்வோர் வழங்கும் பணம்சாரா வசதிகளும், வாடிக்கையாளர் நேரடியாக வழங்கும் ஊக்கப்பணமும் கிடைப்பதுண்டு.
கூலித் தொழில், வேலை செய்யும் நேரத்துக்காகப் பணத்தைப் பரிமாறிக் கொள்வதோடு தொடர்புடையது. மோசசு ஐ. பின்லி தான் எழுதிய பண்டைக்காலப் பொருளியல் (The Ancient Economy) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
கூலி என்பது ஒரு நியம அலகு வேலை நேரத்துக்கான பண அளவு ஆகும். தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நேர அலகு ஒரு நாள் ஆக இருந்தது. மணிக்கூட்டின் கண்டுபிடிப்பின் பின்னர் வேலை நேரத்தை மேலும் சிறிய அலகுகளாகப் பிரிக்க முடிந்தது. இதனால், ஒரு மணிநேரம் பொதுவான அலகானது.[2][3]
பண்டை எகிப்து,[4] பண்டைக் கிரேக்கம்,[5] பண்டை உரோம்[5] ஆகியவற்றில் கூலி முறை காணப்பட்டது.
{{cite book}}