குரு குலம் (சமசுகிருதம்: गुरुकुल) இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும்.[1]
தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் குருகுலக் கல்வி முறை, இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டானியார்கள் வருகை வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தது. குரு பரம்பரை இன்றளவும் போற்றப்படுகிறது.
குரு குலத்தில் படிக்கும் அனைத்து வர்ணங்களைச் சார்ந்த மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் குரு கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
குரு குலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
குரு குலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை பிரம்மச்சாரிகள் என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
குருகுலத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள்
வேத வேதாந்த சாத்திரங்கள், வேதாங்கங்கள், உபவேதங்கள், யோகா, தர்க்கம், அரசியல், அரச தந்திரம், இதிகாசம், புராணம் மற்றும் சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பொது அறிவு போன்ற பல கலைகளை குரு, சீடர்களுக்கு போதிப்பார்.
இவைகள் தவிர ஐம்புலன்களை அடக்கி, விவேகம், வைராக்கியம், ஆத்ம ஞானம் போன்ற உயர் கல்விகளும் குரு, சீடர்களுக்கு கற்றுத்தருவார்.
குருதட்சனை
கல்வி பயின்று முடித்த சீடர்கள், தாம் குருவிடமிருந்து கற்ற கல்விக்கு பிரதிபலனாக பொருளாகவோ அல்லது பணமாகவோ குரு தட்சணை சமர்ப்பிக்க வேண்டும். குருவிற்கும் குருவின் ஆசிரமத்திற்கும் நன்கு பணிவிடை செய்த சீடர்களிடம் குருவானவர் குருதட்சனை பெறுவதில்லை.
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை பிரம்மச்சாரிகள் என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
வரலாறு
குருகுல கல்வி முறையானது வேத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. உபநிடதங்கள் பல குருகுலங்களைப் பற்றி கூறுகிறது. யாக்ஞவல்கியர், வசிட்டர், வியாசர், வாருணி போன்ற குருக்கள், குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக கூறுகிறது. 8 முதல் 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு உபநயனம் எனும் சமயச் சடங்கு செய்து முடித்த பின்பே குருகுலத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவர். கல்வி பயின்று முடியும் வரை மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சர்ய விரதம் கடைபிடிக்க வேண்டும்.
குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் உதவி செய்தனர்.
தற்காலத்தில் குருகுல நிலைமை
ஆங்கிலேய முறைக் கல்வி இந்தியாவில் தொடங்கிய பின்பு வேதகால குருகுலங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ளது. இருப்பினும் அரித்வார், ரிஷிகேஷ், காசி, புனே, சென்னை, கோவை, உத்தரகாசி போன்ற இடங்களில் வேதக் கல்வி மற்றும் வேதாந்தக் கல்வி இன்றளவிலும் குருகுலத்தில் கற்றுத் தரப்படுகிறது. அவைகளின் சில குருகுலங்களை காண்போம்:
- இராமகிருஷ்ண மடம், கொல்கத்தா, சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கொச்சி [1] [2] பரணிடப்பட்டது 2013-03-28 at the வந்தவழி இயந்திரம் [3] பரணிடப்பட்டது 2013-11-03 at the வந்தவழி இயந்திரம் [4]
- சுவாமி விவேகானந்தர் கேந்திரம் [5]
- சுவாமி சிவானந்தர் ஆசிரம்ம், ரிஷிகேஷ், [6] பரணிடப்பட்டது 2013-10-26 at the வந்தவழி இயந்திரம்
- சுவாமி சின்மயானந்தா, ரிஷிகேஷ், [7][தொடர்பிழந்த இணைப்பு]
- சுவாமி தயானந்தர், ரிஷிகேஷ், [8] 2. [9]
- சுவாமி குருபரானந்தர் உத்திரமேரூர், [10]
- சுவாமி பரமார்த்தனந்தர், சென்னை, [11] பரணிடப்பட்டது 2019-09-16 at the வந்தவழி இயந்திரம்
- சுவாமி ஓங்காரனந்தர், தேனி, [12]
- சுவாமி சுத்தானந்தர் [13]
- சுவாமி கிருஷ்ணானந்தர் [14]
மேற்கோள்கள்
இதனையும் காண்க