கிளமெண்ட் அட்லீ

1945 ஆம் ஆண்டின் தொழிலாளர் கட்சி வெற்றியை அடுத்து பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே ஆறாம் ஜார்ஜுடன் கிளமென்ட் அட்லீ

கிளமெண்ட் ரிச்சர்டு அட்லீ அல்லது கிளமென்ட் அட்லீ (Clement Richard Attlee, 03 சனவரி 1883 - 08 அக்டோபர் 1967) பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஐக்கிய ராச்சியத்தின் முன்னாள் பிரதமரும் ஆவார். இங்கிலாந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுகொண்டிருந்த நேரம் அந்நாட்டின் முதல் துணை பிரதமராக பதவியேற்றவர். 1945 ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சிலின் பழமைவாதக் கட்சி ஆட்சியை இழந்தபோது தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்த அட்லீ ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானர். 1945 ஆம் ஆண்டிலிருந்து 1951 ஆம் ஆண்டுவரை அந்த பதவியில் இருந்தார். இவரது ஆட்சி காலத்தில்தான் இந்தியா, பாகிஸ்தான், பர்மா ( மியான்மர்), சிலோன் (இலங்கை) போன்ற காலனி நாடுகள் பிரித்தானிய அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் அடைந்தன. அட்லீ தனது தொழிலாளர் கட்சியின் தலைவராக 1935 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தார்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!