கலச்சுவர்

தாவரக் கலத்தின் வரைபடம், கலச்சுவர் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

கலச்சுவர் (cell wall) என்பது சில வகைக் கலங்களைச் சூழக் காணப்படும் நெகிழ்வான, ஓரளவு கடினமான (சாதாரண கருங்கல் போன்றவற்றுடன் ஒப்பிடக் கூடாது) படை ஆகும். இது கலங்களைச் சூழ இருக்கும் கலமென்சவ்வுக்கு வெளியே காணப்படுகின்றது. இது காணப்படும் கலங்களில் அமுக்கத் தடுப்பியாகத் தொழிற்படுகின்றது. கலம் அதிக நீரினை உறிஞ்சி வீங்கி வெடித்தலை கலச்சுவர் தடுக்கின்றது. தாவரங்கள், பக்டீரியாக்கள், அல்காக்கள், பூஞ்சைகள் மற்றும் சில வகை ஆர்க்கியாக்களின் கலங்களைச் சூழ கலச்சுவர் காணப்படுகின்றது[1]. விலங்கு மற்றும் புரட்டோசோவா கலங்களைச் சூழ கலச்சுவர் காணப்படுவதில்லை. கலச்சுவர் கலத்தின் உயிரற்ற பகுதியென்றாலும், அது காணப்படும் கலத்தின் நிலவுகையில் முக்கிய பங்கை வகிக்கின்றது. கலச்சுவரை ஆக்கும் பதார்த்தம் இனத்துக்கு இனமும் கலத்துக்குக் கல்மும் வேறுபடும். பொதுவாக தாவரங்களில் கலச்சுவரின் பிரதான கூறு செல்லுலோசு ஆகும். பூஞ்சைகளின் கலச்சுவர் கைட்டினால் ஆக்கப்படிருக்கும். பக்டீரியாக்களின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கன் மூலம் ஆக்கப்பட்டிருக்கும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Cell Wall - What's it for?

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!