தமிழா எ-கலப்பை (இகலப்பை; eKalappai என்றும் அறியப்படுகிறது) எனப்படும் மென்பொருள் ( கலப்பை என்ற சொல்லுக்கு பொருள்: ஏர் கருவி வகைகளில் ஒன்று. கலப்பை எனும் கருவி நிலத்தின் மேற்புறத்தைக் கீறி உழவு செய்ய பயன்படும்.[1] "எறும்புகள்" எனப்படும் அமைப்பின் கலப்பை அல்லது இலத்திரனியற் கலப்பை.) தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் ஒன்று. இது ஒருங்குறி மற்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறைகளை ஆதரிக்கின்றது. இது கீழ்வரும் விசைப் பலகை அமைப்புக்களில் கிடைக்கின்றது
இம் மென்பொருள் XP/விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்கவல்லது. இணையத்தில் மற்றும் கூகிள் டாக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் தூதுவர்களூடாக இணைய உரையாடல்கள் செய்யமுடியும். தமிழா எ-கலப்பை பரணிடப்பட்டது 2011-08-30 at the வந்தவழி இயந்திரம் மென்பொருளானது பதிவிறக்கம் செய்யக்கூடியது.
இது GNU GPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருள். இந்த மென்பொருளின் தற்போதைய பதிப்பு: 3.0
வெளியிணைப்புக்கள்
உசாத்துணைகள்